இந்தியா

உத்தரகண்டில் குடியரசுத் தலைவர் ஆட்சி: உச்ச நீதிமன்றத்தில் அடுத்த வாரம் விசாரணை

உத்தரகண்டில் குடியரசுத் தலைவர் ஆட்சியை அமல்படுத்தியதற்கு எதிராக உச்ச நீதிமன்றத்தில் தொடரப்பட்ட பொது நலன் மனு அடுத்த வாரம் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்படுகிறது.

PTI

உத்தரகண்டில் குடியரசுத் தலைவர் ஆட்சியை அமல்படுத்தியதற்கு எதிராக உச்ச நீதிமன்றத்தில் தொடரப்பட்ட பொது நலன் மனு அடுத்த வாரம் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்படுகிறது.

பொது நலன் மனுவை தாக்கல் செய்த வழக்குரைஞர் எம்.எல். ஷர்மா, இவ்வழக்கை அவசர வழக்காக விசாரிக்குமாறு கோரிக்கை வைத்தார்.

ஆனால், மனுவை விசாரித்த உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி டி.எஸ். தாக்கூர், நீதிபதிகள் ஆர். பானுமதி, யு.யு. லலித் ஆகியோர் அடங்கிய அமர்வு, அடுத்த வாரம் விசாரிக்கப்படும் என்று தெரிவித்துள்ளது.

உத்தரகண்டில் நம்பிக்கை வாக்கெடுப்பு மூலம் தங்கள் பெரும்பான்மையை ஹரீஷ் ராவத் அரசு திங்கள்கிழமை (மார்ச் 28) நிரூபிக்க வேண்டும் என ஆளுநர் கே.கே.பால் உத்தரவிட்டிருந்தார்.

இந்நிலையில், அந்த கெடுவுக்கு ஒருநாள் முன்னதாகவே (ஞாயிற்றுக்கிழமை) மாநிலத்தில் குடியரசுத் தலைவர் ஆட்சி அமல்படுத்தப்பட்டது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கட்டாயப்படுத்தி என்னை முதல்வராக்கினார்கள்; தனிக்கட்சி தொடங்கமாட்டேன்: ஓபிஎஸ்

கல்கி - 2 படப்பிடிப்பில் அமிதாப் பச்சன், கமல் ஹாசன்!

எதிர்க்கட்சித் தலைவரா? அல்லது இந்தியாவை எதிர்ப்பவர்களின் தலைவரா? ராகுல் மீது பாஜக எம்.பி. கடும் தாக்கு!

மணிப்பூரில் இடம்பெயர்ந்த மக்களுக்கு 5,000 வீடுகள்: மத்திய அரசு ஒப்புதல்!

எனக்கு தடையாக இருக்கும் அந்த சிலர்... சிவகார்த்திகேயன் பேச்சு!

SCROLL FOR NEXT