இந்தியா

பதான்கோட்டில் பாகிஸ்தான் விசாரணைக் குழு: காங்கிரஸ் தொண்டர்கள் போராட்டம்

பதான்கோட் விமான படைத் தளத்தில் நடத்தப்பட்ட பயங்கரவாதத் தாக்குதல் குறித்து விசாரணை நடத்த வந்துள்ள பாகிஸ்தான் குழுவுக்கு எதிராக காங்கிரஸ் தொண்டர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

PTI

பதான்கோட் : பதான்கோட் விமான படைத் தளத்தில் நடத்தப்பட்ட பயங்கரவாதத் தாக்குதல் குறித்து விசாரணை நடத்த வந்துள்ள பாகிஸ்தான் குழுவுக்கு எதிராக காங்கிரஸ் தொண்டர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

பஞ்சாப் மாநிலம் பதான்கோட் விமானப் படைத் தளத்தில் பயங்கரவாதிகள் புகுந்து தாக்குதல் நடத்தினர்.

இது குறித்து இந்திய - பாகிஸ்தான் அதிகாரிகள்   இணைந்து விசாரணை நடத்தி வருகின்றனர். இன்று, பயங்கரவாதத் தாக்குதல் நடத்தப்பட்ட பதான்கோட் விமானப் படைத் தளத்தில் அக்குழுவினர் நேரில் ஆய்வு நடத்தவிருக்கின்றனர்.

இதற்காக, விசாரணைக் குழுவினர் பதான்கோட் விமானப்படைத் தளத்துக்கு குண்டுகள் துளைக்காத வாகனங்களில் வந்துள்ளனர்.

பாகிஸ்தான் விசாரணைக் குழுவினருக்கு எதிர்ப்பு தெரிவித்து ஏராளமான காங்கிரஸ் தொண்டர்கள் கருப்புக் கொடி ஏந்தியும், பாகிஸ்தானுக்கு எதிராக கோஷம் எழுப்பியும் விமானப் படைத் தள வளாகத்துக்கு அருகே போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

போராட்டத்தைத் தொடர்ந்து விமானப் படைத் தளத்தில் ஏராளமான போலீஸார் குவிக்கப்பட்டுள்ளனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கட்டாயப்படுத்தி என்னை முதல்வராக்கினார்கள்; தனிக்கட்சி தொடங்கமாட்டேன்: ஓபிஎஸ்

கல்கி - 2 படப்பிடிப்பில் அமிதாப் பச்சன், கமல் ஹாசன்!

எதிர்க்கட்சித் தலைவரா? அல்லது இந்தியாவை எதிர்ப்பவர்களின் தலைவரா? ராகுல் மீது பாஜக எம்.பி. கடும் தாக்கு!

மணிப்பூரில் இடம்பெயர்ந்த மக்களுக்கு 5,000 வீடுகள்: மத்திய அரசு ஒப்புதல்!

எனக்கு தடையாக இருக்கும் அந்த சிலர்... சிவகார்த்திகேயன் பேச்சு!

SCROLL FOR NEXT