பிரஸ்ஸெல்ஸ் தாக்குதலில் பலியானோருக்கு மோடி அஞ்சலி
மூன்று நாடுகள் பயணத்தின் தொடக்கமாக, முதலில் பிரஸ்ஸெல்ஸ் சென்ற பிரதமர் மோடி, பிரஸ்ஸெல்ஸில் நிகழ்ந்த குண்டு வெடிப்பு தாக்குதலில் பலியானவர்களுக்கு, அஞ்சலி செலுத்தினார்.
மூன்று நாடுகள் பயணத்தின் தொடக்கமாக, முதலில் பிரஸ்ஸெல்ஸ் சென்ற பிரதமர் மோடி, கடந்த வாரம் நிகழ்ந்த குண்டுவெடிப்பு தாக்குதலில் பலியானவர்களுக்கு, அஞ்சலி செலுத்தினார்.
கடந்த வாரம் பிரஸ்ஸெல்ஸில் மிக பயங்கர வெடிகுண்டு தாக்குதல்கள் நடத்தப்பட்டதில் தமிழக பொறியாளர் உட்பட 32 பேர் பலியாகினர்.
இதையடுத்து தாக்குதல் நடந்த மேல்பீக் மெட்ரோ ரயில் நிலையத்துக்குச் சென்ற பிரதமர் நரேந்திர மோடி, பலியானவர்களுக்கு இறுதி மரியாதை செலுத்தினார்.
Advertisement
மூன்று நாடுகள் பயணத்தின் தொடக்கமாக, முதலில் பிரஸ்ஸெல்ஸ் சென்ற பிரதமர் மோடி, பெல்ஜியம் பிரதமர் சார்லஸ் மைக்கேலை சந்தித்துப் பேசுகிறார். அதைத் தொடர்ந்து, இந்திய-ஐரோப்பிய ஒன்றிய உச்சி மாநாட்டில் பங்கேற்கிறார்.
அரசு முறைப் பயணமாக பிரஸ்ஸெல்ஸ் சென்றுள்ள பிரதமர் மோடிக்கு அங்கு சிவப்புக் கம்பள வரவேற்பு அளிக்கப்பட்டது.