இந்தியா

வீரர்களின் திடீர் ஆய்வுப் பணி குறித்த விவரம் கசிந்துள்ளது: சிஆர்பிஎஃப் அதிர்ச்சி

தண்டேவாடா பகுதியில் சிஆர்பிஎஃப் படையினர் ரோந்து வரும் தகவல் எப்படியோ கசிந்திருப்பதால்தான், மிக மோசமான கண்ணிவெடித் தாக்குதல் நடத்தப்பட்டதாக சிஆர்பிஎஃப் கூறியுள்ளது.

PTI

ராய்புர்: தண்டேவாடா பகுதியில் சிஆர்பிஎஃப் படையினர் ரோந்து வரும் தகவல் எப்படியோ கசிந்திருப்பதால்தான், மிக மோசமான கண்ணிவெடித் தாக்குதல் நடத்தப்பட்டதாக சிஆர்பிஎஃப் கூறியுள்ளது.

ஏதோ ஒரு வகையில், சிஆர்பிஎஃப் படையினரின் நடமாட்டம் குறித்து தகவல் வெளியே கசிந்துள்ளது. எங்கேயோ, ஏதோ ஒரு இடத்தில் இது நிகழ்ந்துள்ளது. தண்டேவாடா பகுதியில் படை வீரர்கள் திடீர் ஆய்வினை மேற்கொண்டனர். அது பற்றி எப்படி தெரிந்தது என்று விசாரணை நடத்தி வருகிறோம் என்று சிஆர்பிஎஃப் இயக்குநர் கே. துர்கா பிரசாத் கூறினார்.

மாவோயிஸ்டுகள் நடமாட்டம் அதிகம் இருக்கும் தண்டேவாடா பகுதியில் நேற்று நடத்தப்பட்ட கண்ணிவெடித் தாக்குதலில் சிஆர்பிஎஃப் வீரர்கள் 7 பேர் பலியாகினர்.  இதில், டாடா-709 மினி டிரக் முற்றிலும் சேதமடைந்தது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

என்டிஏ கூட்டணிக்கு சசிகலா, ஓபிஎஸ் வருவார்களா? - டிடிவி தினகரன் பதில்!

இம்முறை முற்றிலும் வித்தியாசமாக இருக்கும்: விஜய் சேதுபதி

மார்ச் 1 - திருப்பரங்குன்றத்தில் பிரதமர் மோடி தரிசனம்!

கட்டாயப்படுத்தி என்னை முதல்வராக்கினார்கள்; தனிக்கட்சி தொடங்கமாட்டேன்: ஓபிஎஸ்

கல்கி - 2 படப்பிடிப்பில் அமிதாப் பச்சன், கமல் ஹாசன்!

SCROLL FOR NEXT