ஹிமாலப்பிரதேசத்தில் ஜீப் கவிழ்ந்து விபத்து: 13 பேர் பலி
ஹிமாலப்பிரதேசத்தில், கின்னாவூர் மாவட்டத்தில் ஜீப் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் 13 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.
சிம்லா: ஹிமாலப்பிரதேசத்தில், கின்னாவூர் மாவட்டத்தில் ஜீப் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் 13 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.
நேற்றிரவு கின்னாவூர் மலைக்குன்றில் இருந்து கம்பா சாலையில் ஜீப் கவிழ்ந்து விபத்து ஏற்பட்டது. இதில் 13 பேர் உயிரிழந்தனர். மேலும் சிலர் காயமடைந்தனர். விபத்தில் காயமடைந்தவர்களை அருகில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
இந்த விபத்து, புதுமணப்பெண்ணை தனது வீட்டில் விட்டு திரும்பும் போது நிகழ்ந்ததாக கூறப்படுகிறது.
Advertisement