புதுதில்லி: இந்திய வங்கிகளிடம் ரூ.9000 கோடியளவுக்கு கடன் பெற்று விட்டு, திரும்பிச் செலுத்தாமல் இங்கிலாந்தில் பதுங்கியிருக்கும், தொழிலதிபர் மல்லையாவுக்கு, இந்தியாவுக்கு திரும்பும் எண்ணமே இல்லை என்று தில்லி நீதிமன்றம் ஒன்று கருத்து தெரிவித்துள்ளது.
ஸ்டேட் பாங்க் ஆப் இந்தியா உள்ளிட்ட 17 தேசிய மயமாக்கப்பட்ட வங்கிகளிடம் இருந்து ரூ.9000 கோடி கடன் பெற்ற பிரபல தொழில் அதிபர் விஜய் மல்லையா, அதனை திருப்பி செலுத்தாமல் மோசடி செய்து விட்டு லண்டனில் பதுங்கியுள்ளார். அவர் மீது பண மோசடி உள்ளிட்ட பல்வேறு வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. நீதிமன்றத்தில் ஆஜராகி விளக்கமளிக்குமாறு அவருக்கு பலமுறை சம்மன்கள் அனுப்பப்பட்டன.ஆனால் அவர் ஒருமுறை கூட ஆஜராகவில்லை.
இந்நிலையில் அந்நிய செலவாணி மோசடி வழக்கு ஒன்றில் நீதிமன்ற சம்மன்களை மதிக்காத காரணத்தால்,, மல்யாலையாவுக்கு இன்று பிணையில் வெளிவர முடியாத கைது ஆணையை பாட்டியாலா நீதிமன்றம் பிறப்பித்தது.
அதேபோல் ஜி.எம்.ஆர் நிறுவனத்திற்கு அளித்த காசோலைகள் செல்லாத மோசடி வழக்கிலும், மல்லையாவுக்கு இன்று பிணையிவ் வெளிவர இயலாத கைது ஆணை பிறப்பிக்கப்பட்டது.
அப்போது கருத்து தெரிவித்த நீதிபதிகள் கூறியதாவது:
இந்தியாவின் சட்டம் மற்றும் விதிமுறைகளை பற்றியெல்லாம் மல்லையா துளியும் கவலைப்படவில்லை.அவருக்கு இந்தியாவுக்கு திரும்பும் எண்ணமே இல்லை. இந்தியாவுக்கு திரும்பும் விருப்பம் இருந்தாலும், தன்னுடைய பாஸ்போர்ட் முடக்கப்பட்டு விட்டதாக மல்லையா கூறுவது நீதிமன்ற செயல்பாடுகளை ஏமாற்றும் தீய எண்ணத்துடன் கூறப்படும் ஒன்றாகும்.
இவ்வாறு நீதிபதிகள் கருத்து தெரிவித்தனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.