இந்தியா

ரூபாய் நோட்டுகள் விவகாரம்: நாளை நாடாளுமன்றத்தை முற்றுகையிடுகிறது ஆம் ஆத்மி!

பழைய 500 மற்றும் 1000 ரூபாய் நோட்டுக்கள் செல்லாது என்று அறிவித்த விவகாரத்தில் மத்திய அரசைக்  கண்டித்து  நாளை நாடாளுமன்றத்தை முற்றுகையிடும் போராட்டத்தை நடத்த உள்ளதாக ஆம் ஆத்மி கட்சி...

புதுதில்லி: பழைய 500 மற்றும் 1000 ரூபாய் நோட்டுக்கள் செல்லாது என்று அறிவித்த விவகாரத்தில் மத்திய அரசைக்  கண்டித்து  நாளை நாடாளுமன்றத் தை முற்றுகையிடும் போராட்டத்தை நடத்த உள்ளதாக ஆம் ஆத்மி கட்சி அறிவித்துள்ளது.

இது தொடர்பாக தில்லியில் இன்று செய்தியாளர்களிடம் பேசிய அக்கட்சித் தலைவர்கள் ஆஷிஷ் கேதான் மற்றும் திலிப் பாண்டே ஆகிய இருவரும் தெரிவித்ததாவது: 

மத்திய அரசின் இந்த அறிவிப்பு பெரு முதலாளிகளுக்கு உதவும் பொருட்டு மட்டுமே அறிவிக்கப்பட்டுள்ளது. கருப்பு பணத்தை வெளிக்கொணர்வதற்காக அல்ல.

மத்திய அரசின் இந்த நடவடிக்கையை  கண்டித்து நாளை நாடாளுமன்றத்தை நோக்கி பேரணி செல்ல  உள்ளோம்.  தில்லி துணை முதல்வர் மனிஷ் சிசோடியா இந்த பேரணிக்கு தலைமை  தாங்க உள்ளார்.

விரைவில் சில மாநிலங்களில் நடைபெற உள்ள சட்டசபை தேர்தலில் இந்த விவகாரம் முக்கிய பிரச்சினையாக இருக்கும்.

மேலும் இந்த விவகாரம் தொடர்பாக தில்லி முதல்வரும், ஆம் ஆத்மி கட்சி ஒருங்கிணைப்பாளருமான அர்விந்த் கெஜ்ரிவால் மீரட் , லக்னோ மற்றும் வாரணாசி ஆகிய இடங்களில் நடைபெறும் பொதுக்கூட்டங்களில் கலந்து கொண்டு உரையாற்ற உள்ளார்.

இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கரூா் சம்பவத்தில் உரிய நடவடிக்கை தேவை: பாமக கௌரவ தலைவா் ஜி.கே. மணி

புற்றுநோய் விழிப்புணா்வு நெடுந்தொலைவு ஓட்டம்

செயலி மூலம் 100-க்கும் மேற்பட்ட பெண்களை ஏமாற்றி பணம் பறித்தவா் கைது

ராணிப்பேட்டை: குறைதீா் கூட்டத்தில் 337 மனுக்கள்

கரூா் சோக சம்பவத்தில் நான்கு பக்கமும் தவறுகள் நடந்திருக்கின்றன: ப.சிதம்பரம்

SCROLL FOR NEXT