இந்தியா

ஆயிரம் ரூபாயா கொட்டிய பக்தர்கள்: சபரிமலை ஐயப்பன் கோயில் உண்டியல் வருமானம் அதிரடி உயர்வு

கேரள மாநிலத்தில் அமைந்துள்ள சபரிமலை ஐயப்பன் கோயிலின் வருமானம், எந்த ஆண்டும் இல்லாத அளவுக்கு இந்த ஆண்டு பல மடங்கு அதிகரித்துள்ளது.


சபரிமலை: கேரள மாநிலத்தில் அமைந்துள்ள சபரிமலை ஐயப்பன் கோயிலின் வருமானம், எந்த ஆண்டும் இல்லாத அளவுக்கு இந்த ஆண்டு பல மடங்கு அதிகரித்துள்ளது.

சபரிமலை ஐயப்பன் கோயிலில் உள்ள உண்டியலில் எப்போதும் 500 மற்றும் 1000 ரூபாய் நோட்டுகள் குறைவாகத்தான் இருக்கும். ஆனால், இந்த ஆண்டு நவம்பர் 16ம் தேதி தொடங்கிய சபரிமலை கோயில் நடை திறக்கப்பட்ட பிறகு நூற்றுக் கணக்கான ஆயிரம் ரூபாய் நோட்டுகள் உண்டியலில் போடப்பட்டுள்ளது.

தரிசனக் கட்டணம், உண்டியல் வருமானம் என முதல் வாரத்தில் வந்த வருமானத்தைக் கணக்கிட்டதில், வழக்கமான வருமானத்தை விட சுமார் 2 கோடி ரூபாய் அளவுக்கு அதிகரித்திருப்பதாக கோயில் நிர்வாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

கடந்த ஒரு வார காலத்தில் மட்டும் கோயில் வருமானம் ரூ.22 கோடியை எட்டிவிட்டது என்று திருவாங்கூர் தேவசம் போர்ட் உறுப்பினர் அஜய் தெரிவித்துள்ளார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

இலக்கு மட்டும்... சிம்ரன் சௌத்ரி

மாடர்ன் புறா... பிரியங்கா ஜவல்கர்

மும்பை: சொகுசு ஹோட்டலுக்கு வெடிகுண்டு மிரட்டல்

போப் பதினான்காம் லியோவின் முதல் வெளிநாடு பயணம்! எங்கு தெரியுமா?

வலையில் சிக்கிய 150 கிலோ எடை ஆமை: கடலில் விட்ட மீனவர்

SCROLL FOR NEXT