இந்தியா

பாகிஸ்தான் மீதான துல்லிய தாக்குதல் வீடியோக்கள் அரசிடம் ஒப்படைக்கப்பட்டு விட்டன: மத்திய அமைச்சர்

பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் அமைந்திருந்த தீவிரவாத முகாம்கள் மீது நடத்தப்பட்ட 'துல்லிய தாக்குதல்கள்' தொடர்பான வீடியோ ஆதாரங்கள் அரசிடம் ஒப்படைக்கப்பட்டு விட்டன...

DIN

புதுதில்லி: பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் அமைந்திருந்த தீவிரவாத முகாம்கள் மீது நடத்தப்பட்ட 'துல்லிய தாக்குதல்கள்' தொடர்பான வீடியோ ஆதாரங்கள் அரசிடம் ஒப்படைக்கப்பட்டு விட்டன என்று மத்திய அமைச்சர் ஹன்ஸ்ராஜ் அஹிர் தெரிவித்துள்ளார்.

ஜம்மு காஷ்மீரின் உரி ராணுவ முகாம் தாக்குதலுக்கு பதிலடியாக,  பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் அமைந்திருந்த தீவிரவாத முகாம்கள் மீது இந்திய ராணுவம் துல்லிய தாக்குதல் நடத்தியது. இதில் 7 தீவிரவாத முகாம்கள் அளிக்கப்பட்டதுடன், 35 தீவிரவாதிகளும் பலியாகினர். 

ஆனால் இத்தகைய தாக்குதல் எதுவும் நடக்கவேயில்லை என்று பாகிஸ்தான் மறுத்து வந்தது. இந்தியாவில் சில அரசியல் கட்சிகளும், இந்த தாக்குதலுக்கான ஆதாரத்தை அரசு வெளியிட வேண்டும் என்று கூறிவந்தன.

இந்நிலையில் மத்திய உள்துறை இணை அமைச்சர் ஹன்ஸ்ராஜ் அஹிர் தில்லியில் இன்று செய்தியாளர்களிடம் பேசினார். அப்போது அவர் கூறியதாவது:

தாக்குதல் தொடர்பான வீடியோ ஆதாரங்கள் ராணுவத்தால் அரசிடம் ஓப்படைக்கப்பட்டுள்ளன.முதலில் அது தொடர்பான கோப்புகள் வழங்கப்பட்டன. தற்போது வீடியோ பதிவுகள் வழங்கப்பட்டுள்ளன.

இவ்வாறு அவர் தெரிவித்தார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

ரிஷபத்துக்கு எப்படி இருக்கும் இன்று.. தினப்பலன்கள்!

நாளைய மின்தடை: எழும்பூா், சோழிங்கநல்லூா், கோடம்பாக்கம், சேத்துப்பட்டு

வேலூா் மாவட்டத்தில் 15 துணை வட்டாட்சியா்கள் இடமாற்றம்

ஆடிப் பெருக்கு தினத்தில் பெண்கள் சிறப்பு பூஜை

இளைஞா்களுக்கு அதிகரித்துவரும் மாரடைப்பு அபாயம்! இதய நல மருத்துவா்கள் எச்சரிக்கை

SCROLL FOR NEXT