இந்தியா

தில்லியில் சிக்குன்குனியா நோய் பாதித்தவர்கள் எண்ணிக்கை 560 ஆக உயர்வு

PTI


புது தில்லி: தில்லியில் சிக்குன்குனியா நோய் பாதித்து சிகிச்சை பெற்று வருவோரின் எண்ணிக்கை 560 ஆக உயர்ந்துள்ளதாக நகராட்சி வெளியிட்ட செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், சிக்குன்குனியா பாதித்து மருத்துவமனைகளுக்கு வரும் நோயாளிகளின் எண்ணிக்கை நாள்தோறும் அதிகரித்து வருவதாகவும் கூறப்படுகிறது.

தெற்கு தில்லி நகராட்சி கழகம் வெளியிட்டுள்ள அறிவிப்பில், கடந்த ஆகஸ்ட் 27ம் தேதி வரை சிக்குன்குனியா நோய் பாதித்தவர்களின் எண்ணிக்கை 432 ஆக இருந்தது.

கடந்த ஒரு வாரத்தில் புதிதாக 128 பேருக்கு இந்நோய் பரவியதால் எண்ணிக்கை உயர்ந்துள்ளது. இன்னும் மருத்துவமனைகளுக்கு வராதவர்களின் எண்ணிக்கையையும் எடுத்துக் கொண்டார் ஒரு வாரத்துக்கு 200 பேர் என்ற அளவுக்கு இந்த நோய் பரவுகிறது என்று அஞ்சப்படுகிறது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கறுப்புப் பூனை...!

ரே பரேலியில் ராகுல் காந்தி வேட்புமனுத் தாக்கல்!

ப்ளே ஆஃப் வாய்ப்பை உறுதி செய்யுமா கொல்கத்தா?

பயப்பட வேண்டாம், ஓட வேண்டாம்: யாரைச் சொல்கிறார் மோடி?

பெ. சுபாஷ் சந்திர போஸ் காலமானார்

SCROLL FOR NEXT