முகப்பு
இந்தியா

ரயில்வேக்கு இனி தனி பட்ஜெட் கிடையாது: மத்திய அமைச்சரவை முடிவு

ரயில்வே துறைக்கு என இனி தனி பட்ஜெட் தாக்கல் செய்யப்படாது என்ற முடிவுக்கு மத்திய அமைச்சரவை அனுமதி அளித்துள்ளது.

Updated On : 25 ஜனவரி, 2024 at 10:15 AM
railway_budget
பகிர்:


புது தில்லி: ரயில்வே துறைக்கு என இனி தனி பட்ஜெட் தாக்கல் செய்யப்படாது என்ற முடிவுக்கு மத்திய அமைச்சரவை அனுமதி அளித்துள்ளது.

வரும் நிதியாண்டு முதல் பொது பட்ஜெட்டுடன், ரயில்வே பட்ஜெட்டையும் இணைத்துத் தாக்கல் செய்யவும் மத்திய அமைச்சரவை ஒப்புக் கொண்டுள்ளது.

தில்லியில் பிரதமர் மோடி தலைமையில் இன்று நடைபெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது.

மேலும், பொது பட்ஜெட்டை முன்னதாகவே தாக்கல் செய்யவும் மத்திய அமைச்சரவைக் கூட்டத்தில் அனுமதி வழங்கப்பட்டது.

இதன் மூலம், 2017 - 18ம் நிதியாண்டு முதல் பொது பட்ஜெட்டுடன், ரயில்வே பட்ஜெட்டும் இணைத்து தாக்கல் செய்யப்படும். அதோடு, பொது பட்ஜெட் முன்னதாகவே தாக்கல் செய்யப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.

முழு கட்டுரையைப் படிக்க →