இந்தியா

பத்திரிகையாளர் கொலை: சஹாபுதீன், லாலு மகன் உள்ளிட்டோருக்கு உச்ச நீதிமன்றம் நோட்டீஸ்

பிகாரில் பத்திரிகையாளர் சுட்டுக் கொலை செய்யப்பட்ட வழக்கில் லாலு பிரசாத் யாதவின் மகன் தேஜ் பிரதாப் யாதவுக்கும், அக்கட்சியின் மூத்த தலைவர் சஹாபுதீனுக்கும் உச்ச நீதிமன்றம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது.

PTI

புது தில்லி: பிகாரில் பத்திரிகையாளர் சுட்டுக் கொலை செய்யப்பட்ட வழக்கில் லாலு பிரசாத் யாதவின் மகன் தேஜ் பிரதாப் யாதவுக்கும், அக்கட்சியின் மூத்த தலைவர் சஹாபுதீனுக்கும் உச்ச நீதிமன்றம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது.

கொலையுண்ட பத்திரிகையாளரின் குடும்பத்தினருக்கு உரிய பாதுகாப்பு வழங்குமாறு பிகார் போலீஸாரை உச்ச நீதிமன்றம் அறிவுறுத்தியுள்ளது.

பிகாரின் சிவான் பகுதியில் அமைந்துள்ள நாளிதழ் ஒன்றில் பணியாற்றி வந்த ராஜ்தேவ் ரஞ்சன் கடந்த மே மாதம் சுட்டுக் கொல்லப்பட்டார். இவ்வழக்கில் சந்தேகிக்கப்படும் இருவர் ஆர்ஜேடி மூத்த தலைவர் சஹாபுதீன், மாநில அமைச்சர் தேஜ் பிரதாப் யாதவ் ஆகியோருக்கு நெருக்கமானவர்கள் எனக் குற்றச்சாட்டு எழுந்தது.

இது குறித்து ராஜ்தேவ் ரஞ்சனின் மனைவி உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனுவை விசாரித்த நீதிபதி தீபக் மிஸ்ரா, இது குறித்து பதில் அளிக்குமாறு தேஜ் பிரதாப் யாதவ் மற்றும் சஹாபுதீனுக்கு நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

காஸா இனப் படுகொலையை பிரதமர் மோடி பேச வேண்டும்: காங்கிரஸ் வலியுறுத்தல்

எங்கள் கூட்டணியில் ‘வெயிட் அண்டு சீ ’நிலைமைகள் எதுவும் இல்லை: தமிழிசை சௌந்ததராஜன்

ஆரோவில் சா்வதேச நகரில் இரண்டாவது உலக ஆன்மிக மகோத்ஸவம்: பிரதமா் நரேந்திர மோடி தொடங்கிவைக்கிறாா்

சூரிய சக்தி மின்தகடு இறக்குமதி! இந்தியா மீது அமெரிக்கா 126% வரி விதிப்பா?

தொழில் வரி செலுத்தியதாக போலி ரசீது கொடுத்து ரூ.5 லட்சம் மோசடி: இளைஞரிடம் போலீஸாா் விசாரணை

SCROLL FOR NEXT