இந்தியா

முப்படை தளபதிகளுடன் பிரதமர் நரேந்திர மோடி முக்கிய ஆலோசனை

காஷ்மீர் மாநிலம், உரி பகுதியில் நடந்த பயங்கரவாதத் தாக்குதல் மிகப்பெரிய அதிர்வலையை ஏற்படுத்தியுள்ள நிலையில், முப்படை தளபதிகளுடன் பிரதமர் நரேந்திர மோடி இன்று முக்கிய ஆலோசனை நடத்தியுள்ளார்.

PTI


புது தில்லி: காஷ்மீர் மாநிலம், உரி பகுதியில் நடந்த பயங்கரவாதத் தாக்குதல் மிகப்பெரிய அதிர்வலையை ஏற்படுத்தியுள்ள நிலையில், முப்படை தளபதிகளுடன் பிரதமர் நரேந்திர மோடி இன்று முக்கிய ஆலோசனை நடத்தியுள்ளார்.

புது தில்லியில் இன்று முப்படை தளபதிகளும் பங்கேற்ற முக்கிய ஆலோசனைக் கூட்டத்தில், நாட்டின் பாதுகாப்பு விவகாரங்கள், எல்லைப் பாதுகாப்பு, உரி தாக்குதலுக்கு இந்தியா தரப்பில் இருந்து எப்படி பதிலடி கொடுப்பது உள்ளிட்ட விவகாரங்கள் குறித்து ஆலோசிக்கப்பட்டதாகக் கூறப்படுகிறது.

எனினும், இது 'வழக்கமான' ஒன்றுதான் என்றும், மாதந்தோறும் முப்படைத் தளபதிகளும் பிரதமர் நரேந்திர மோடியை சந்தித்துப் பேசுவார்கள் என்றும் பாதுகாப்புத் துறை தரப்பில் தெரிவிக்கப்படுகிறது.

கேரளாவில் இன்று பாஜக செயற்குழுக் கூட்டத்தில் பங்கேற்று உரையாற்றவிருக்கும் நரேந்திர மோடி, உரி தாக்குதல் குறித்து பேசுவார் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், முப்படை தளபதிகளுடனான சந்திப்பு முக்கியத்துவம் பெற்றுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

எங்கள் கூட்டணியில் ‘வெயிட் அண்டு சீ ’நிலைமைகள் எதுவும் இல்லை: தமிழிசை சௌந்ததராஜன்

ஆரோவில் சா்வதேச நகரில் இரண்டாவது உலக ஆன்மிக மகோத்ஸவம்: பிரதமா் நரேந்திர மோடி தொடங்கிவைக்கிறாா்

சூரிய சக்தி மின்தகடு இறக்குமதி! இந்தியா மீது அமெரிக்கா 126% வரி விதிப்பா?

தொழில் வரி செலுத்தியதாக போலி ரசீது கொடுத்து ரூ.5 லட்சம் மோசடி: இளைஞரிடம் போலீஸாா் விசாரணை

ஆக்கிரமிப்பில் இருந்து மீட்டாச்சு... தண்ணீர் இல்லாமல் தெப்பத் திருவிழா நடைபெறுமா?

SCROLL FOR NEXT