இந்தியா

பயங்கரவாதம் தொடர்பான வாக்குறுதியை மோடி இன்னமும் நிறைவேற்றவில்லை

DIN

பயங்கரவாதம் தொடர்பாக தேர்தல் பிரசாரத்தில் அளித்த வாக்குறுதிகளை பிரதமர் நரேந்திர மோடி இன்னமும் நிறைவேற்றவில்லை என்று காங்கிரஸ் கட்சி விமர்சித்துள்ளது.
கேரள மாநிலம், கோழிக்கோட்டில் சனிக்கிழமை நடைபெற்ற பாஜக பொதுக் கூட்டத்தில் பிரதமர் நரேந்திர மோடி பேசியபோது, உரி பயங்கரவாத தாக்குதல் சம்பவத்தை இந்தியா மறக்காது என்றும், அத்தாக்குதலில் பாதுகாப்புப் படையினர் செய்த உயிர்த் தியாகம் வீண்போகாது என்றும் குறிப்பிட்டிருந்தார்.
அவரது இந்த கருத்தை தில்லியில் செய்தியாளர்களிடம் பேசிய காங்கிரஸ் தலைமைச் செய்தித் தொடர்பாளர் ரண்தீப் சுர்ஜேவாலா விமர்சித்தார். இதுதொடர்பாக அவர் கூறியதாவது:
உரியில் நிகழ்த்தப்பட்டது போன்ற பயங்கரவாதத் தாக்குதல் சம்பவம் மீண்டும் நிகழ்த்தப்படாமல் தவிர்க்கவும், பயங்கரவாதத்தை கட்டுப்படுத்தவும் எடுக்க வேண்டிய உறுதியான நடவடிக்கை குறித்து பிரதமர் மோடி தனது பேச்சில் எதுவும் குறிப்பிடவில்லை. பயங்கரவாதம் தொடர்பாக அவர் அளித்த தேர்தல் வாக்குறுதிகள் அனைத்தும் வெற்றுகோஷமாகி விட்டன என்றார் அவர்.
இதேபோல், காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் திக்விஜ்ய சிங்கும், பிரதமர் நரேந்திர மோடியை விமர்சித்துள்ளார். இதுதொடர்பாக அவர் சுட்டுரையில் வெளியிட்டிருக்கும் பதிவுகளில், "மோடியின் பேச்சைக் கேட்டு, அவரது ஆதரவாளர்களே ஏமாற்றத்தில் உள்ளனர். பிரதமர் மோடி தனது வார்த்தை ஏவுகணைகளாலேயே பாகிஸ்தானை அழித்து விடுவார்' என்று குறிப்பிட்டுள்ளார்.
காங்கிரஸ் கட்சியின் மற்றோர் மூத்த தலைவர் மணீஷ் திவாரி, பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான மத்திய அரசு கடைபிடிக்கும் வெளிநாட்டுக் கொள்கை குறித்து கேள்வியெழுப்பியுள்ளார். இதுகுறித்து சுட்டுரையில் அவர் வெளியிட்ட பதிவில், "பாகிஸ்தானில் ரஷிய நாட்டு துருப்புகள் உள்ளன. பாகிஸ்தானும், சீனாவும் பொருளாதார முனையத் திட்டத்தை செயல்படுத்தி வருகின்றன. அதில் ஈரானும் சேர விருப்பம் தெரிவித்துள்ளது. இத்தகைய சூழ்நிலையில், பிரதமர் மோடி எந்த உலகத்தில் வாழ்ந்து கொண்டிருக்கிறார்?' எனக் குறிப்பிட்டுள்ளார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கொடைக்கானல்: இன்றிரவு முதல் இ-பாஸ் பெற பதிவு செய்யலாம்

வாரணாசியில் மே 14-ல் பிரதமர் மோடி வேட்புமனு தாக்கல்

பிரதீப் ரங்கநாதனின் புதிய படத்தின் பெயர் அறிவிப்பு!

மோசமான வானிலை காரணமாக 40 விமானங்கள் ரத்து!

நீட் தேர்வு தொடங்கியது!

SCROLL FOR NEXT