இந்தியா

தெலங்கானாவில் பேய் மழை: அபாய நிலையில் கோதாவரி

PTI


ஹைதராபாத்: தெலங்கானாவில் கடந்த சில நாட்களாக பெய்து வரும் கன மழை காரணமாக ஏற்பட்டுள்ள வெள்ளத்தினால் கரீம்நகர் மாவட்டத்தில் ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் பாதுகாப்பான இடங்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.

கரீம்நகர் மாவட்டத்தில் கட்டப்பட்டு வந்த மிட் மனைர் அணையில் தண்ணீர் நிரம்பி, அங்கிருந்து வெளியேறிய நீரால், பல கிராமங்கள் வெள்ளத்தில் மூழ்கின. இதனால், அந்த கிராமங்களில் இருந்த ஆயிரத்துக்கும் மேற்பட்டோர், பாதுகாப்பான இடங்களுக்கு இடம்பெயர்ந்தனர்.

இது ஒரு முன்னெச்சரிக்கை நடவடிக்கைதான் என்றும் தற்போது நிலைமை ஓரளவுக்கு சீராகி வருவதாகவும், அவர்கள் விரைவாக அவரவர் பகுதிகளுக்கு அனுப்பி வைக்கப்படுவர் என்றும் சிறப்பு தலைமைச் செயலர் அறிவித்துள்ளார்.

கோதாவரி ஆற்றில் வெள்ளம் கரைபுரண்டு ஓடுவதால், கரையோர கிராம மக்களுக்கும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. தொடர்ந்து கோதாவரி ஆற்றில் தண்ணீர் வரத்து அதிகரித்துக் கொண்டே இருப்பதால் மீட்புக் குழுவினர் உஷார்படுத்தப்பட்டுள்ளனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மண் அரிப்பு: இடிந்து விழுந்த துலாக்கட்ட சுவா்

ஹரியாணா: பேருந்து தீ பிடித்த விபத்தில் 9 போ் உயிரிழப்பு

யானை வழித்தடங்கள் குறித்து ஆன்லைனில் கருத்துக்கேட்பு கூடாது: மத்திய அமைச்சா் முருகன்

வீட்டு முன் நிறுத்தியிருந்த சைக்கிள் திருட்டு

தூா்வாரும் பணி: நீா்வள ஆதாரத் துறை அலுவலா் ஆய்வு

SCROLL FOR NEXT