புது தில்லி: இந்தியா - பாகிஸ்தான் இடையே 3,323 கி.மீ. தூர எல்லைப் பகுதியில் நவீன தொழில்நுட்பத்துடன் கூடிய வேலி அமைக்க வேண்டும் என்ற பரிந்துரைக்கு மத்திய அரசு முதற்கட்ட ஒப்புதலை அளித்துள்ளது.
மத்திய உள்துறை அமைச்சரவையால் அமைக்கப்பட்ட உள்துறை முன்னாள் செயலாளர் மதுகர் குப்தா தலைமையிலான குழுவினர், பதான்கோட் தாக்குதல் எதிரொலியாக, இந்தியா - பாகிஸ்தான் இடையே அதி நவீன தொழில்நுட்பத்துடன் கூடிய வேலியை அமைக்க வேண்டும் என்ற பரிந்துரையை செய்தது.
இந்தியா - பாகிஸ்தான் எல்லைப் பகுதியில் ஜம்மு-காஷ்மீர் (1,225 கி.மீ.), ராஜஸ்தான் (1,037), பஞ்சாப் (553 கி.மீ.), குஜராத் (508 கி.மீ.) ஆகிய 4 மாநிலங்கள் அமைந்துள்ளன.
நவீன தொழில்நுட்பங்கள் - செயற்கைக் கோள் கண்காணிப்பு - கூடிய வேலியை அமைத்து, அவற்றை நான்கு மாநில காவல்துறையின் கண்காணிப்பில் வைக்கவும் பரிந்துரை செய்யப்பட்டுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.