இந்தியா

ராணுவத் தாக்குதல் எதிரொலி: இந்தியத் தூதருக்கு பாகிஸ்தான் கண்டனம்

DIN

பாகிஸ்தான் எல்லையையொட்டி அமைந்துள்ள பகுதியில் இந்திய ராணுவம் வியாழக்கிழமை அதிகாலை நடத்திய தாக்குதலில் பாகிஸ்தான் ராணுவ வீரர்கள் 2 பேர் உயிரிழந்ததை அடுத்து, இந்தியத் தூதர் கௌதம் பம்பாவாலேவுக்கு அந்நாட்டு அரசு கண்டனம் தெரிவித்து நோட்டீஸ் அனுப்பியுள்ளது.
இதுகுறித்து பாகிஸ்தான் வெளியுறவுத் துறை அலுவலகம் வியாழக்கிழமை வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது:
இந்திய ராணுவத்தினர் அத்துமீறி தாக்குதல் நடத்தியதில் பாகிஸ்தான் வீரர்கள் 2 பேர் உயிரிழந்து விட்டனர். போர்நிறுத்த ஒப்பந்தத்தை மீறி இதுபோன்ற தாக்குதலை இந்திய ராணுவம் தொடர்ந்து நிகழ்த்தி வருகிறது.
இந்தத் தாக்குதலுக்கு கண்டனம் தெரிவித்து இந்தியத் தூதர் கௌதம் பம்பாவாலேவுக்கு நோட்டீஸ் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.
இந்திய ராணுவம் தொடர்ந்து தாக்குதல் நடத்தினால் அதற்கு உரிய பதிலடியை பாகிஸ்தான் ராணுவம் கொடுக்கும் என்று கௌதம் பம்பாவாலேவுக்கு அனுப்பியுள்ள நோட்டீஸில் வெளியுறவுச் செயலர் ஐஸாஸ் அகமது சௌத்ரி குறிப்பிட்டுள்ளார் என்று அந்தச் செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கிராம பகுதிகளில் சூறாவளி காற்றுடன் கன மழை: வாழை பயிர் சேதம்

இங்க நான் தான் கிங்கு படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பு - புகைப்படங்கள்

குஜராத் டைட்டன்ஸ் பேட்டிங்; அணியில் இரண்டு மாற்றங்கள்!

இந்திய அரசமைப்பின் மீது முழுவீச்சில் தாக்குதல் -ராகுல் காந்தி

கண்டநாள் முதல்..

SCROLL FOR NEXT