இந்தியா

பிகாரில் முழு மதுவிலக்கு சட்டத்துக்குத் தடை: பாட்னா உயர் நீதிமன்றம் அதிரடி

DIN


பாட்னா: பிகார் மாநில அரசு கொண்டு வந்த முழு மதுவிலக்குச் சட்டத்தை ரத்து செய்து பாட்னா உயர் நீதிமன்றம் இன்று அதிரடி உத்தரவை பிறப்பித்துள்ளது.

பிகார் அரசு கொண்டு வந்த மது தடைச் சட்டம் சட்டவிரோதமானது என்றும் பாட்னா உயர் நீதிமன்றம் கருத்துத் தெரிவித்துள்ளது.

பிகாரில் ஆட்சியில் இருக்கும் முதல்வர் நிதீஷ் குமார் தலைமையிலான ஐக்கிய ஜனதா தளம், ராஷ்ட்ரீய ஜனதா தளம் கூட்டணி அரசு, அந்த மாநிலத்தில் மதுவிலக்கை கடந்த ஏப்ரல் மாதம் அமல்படுத்தியது.

இதன்படி, பிகாரில் மது விற்பனை செய்தல், மது அருந்துதல் போன்றவற்றுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில், பிகார் மாநில அரசு கொண்டு வந்த சட்டம், சட்டத்துக்கு விரோதமானது என்று பாட்னா உயர் நீதிமன்றம் இன்று உத்தரவிட்டிருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கட்கபுரீஸ்வரா் கோயில் கும்பாபிஷேகம்

திருச்செந்தூரில் மே 22இல் வைகாசி விசாகம்

உடல் பருமன் குறைப்பு சிகிச்சையில் இளைஞா் உயிரிழப்பு: மருத்துவமனை மீது நடவடிக்கை எடுக்க முதல்வரிடம் வலியுறுத்தல்

மண்டல பனைபொருள் பயிற்சி நிலையத்தில் பதநீா் விற்பனை

அரியாங்குப்பம் கோயில் திருவிழா கொடியேற்றம்

SCROLL FOR NEXT