தில்லியில் போராடி வரும் அய்யாகண்ணுவுக்கு மயக்கம்: மருத்துவமனையில் சிகிச்சை
தில்லியில் தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டு வந்த விவசாயிகள் சங்கத் தலைவர் அய்யாகண்ணு மயக்கம் அடைந்ததால், அவர் சிகிச்சைக்காக மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்படுகிறார்.
புது தில்லி: தில்லியில் தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டு வந்த விவசாயிகள் சங்கத் தலைவர் அய்யாகண்ணு மயக்கம் அடைந்ததால், அவர் சிகிச்சைக்காக மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்படுகிறார்.
புது தில்லியில் தொடர்ந்து 23வது நாளாக போராட்டத்தில் ஈடுபட்டு வரும் தமிழக விவசாயிகள், இன்று சாலையில் உருண்டு, புரண்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது, அய்யாகண்ணுவுக்கு மயக்கம் ஏற்பட்டது.
தில்லி ஜந்தர் மந்தர் பகுதியில் நடந்த போராட்டத்தின் போது அய்யாகண்ணு சாலையில் மயங்கி விழுந்த நிலையில், அவர் ஆம்புலன்ஸ் மூலம் ராம்மனோகர் லோகியா மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்படுகிறார்.