இந்தியா

சென்னைக்கு அழைத்து வந்து தினகரனிடம் தில்லி போலீஸ் விசாரணை

DIN

இரட்டை இலை சின்னத்தை பெறுவதற்கு லஞ்சம் கொடுக்க முயன்றதாகக் கூறப்படும் வழக்கு தொடர்பாக தில்லி போலீஸார் டிடிவி தினகரனை வியாழக்கிழமை பிற்பகலில் சென்னைக்கு அழைத்து வந்தனர்.
சென்னை அடையாறில் உள்ள தினகரனின் இல்லத்துக்கு சென்ற போலீஸார் அங்கு அவரிடம் தீவிர விசாரணை நடத்தினர். பின்னர் பெசன்ட் நகரில் உள்ள சி.பி.ஐ. அலுவலகத்துக்கு அழைத்துச் சென்று வியாழக்கிழமை இரவு வரை விசாரணை நடத்தினர்.
தேர்தல் ஆணையத்தால் முடக்கப்பட்ட இரட்டை இலை சின்னத்தை பெறுவதற்காக லஞ்சம் கொடுக்க முயன்றதாக தில்லியில் உள்ள நட்சத்திர ஹோட்டலில் சுகேஷ் சந்திரசேகர் என்பவரை போலீஸார் கைது செய்தனர். அவரிடம் இருந்து ரூ.1.3 கோடி புதிய ரூ. 2 ஆயிரம் நோட்டுகள் பறிமுதல் செய்யப்பட்டன.
கைது செய்யப்பட்ட சுகேஷ் சந்திரசேகரிடம் மேற்கொண்ட தீவிர விசாரணையில், 'அதிமுக துணைப் பொதுச் செயலாளர் டிடிவி தினகரன்தான் ரூ.1.3 கோடியை கொடுத்தார். இதற்காக நாங்கள் சென்னை, கொச்சி, பெங்களூரு ஆகிய நகரங்களில் பல முறை அவருக்கு வேண்டியவர்களை சந்தித்துப் பேசினோம்' என்று கூறியதாக தெரிகிறது.
அதைத் தொடர்ந்து தினகரனுக்கு சம்மன் கொடுத்து தில்லிக்கு வரவழைத்து கடந்த 4 நாள்களாக விசாரணை நடத்திய தில்லி போலீஸார், செவ்வாய்க்கிழமை நள்ளிரவில் கைது செய்தனர். பின்னர் புதன்கிழமை பிற்பகலில் தில்லியில் உள்ள நீதிமன்றத்தில் தினகரன் ஆஜர்படுத்தப்பட்டார். அவரை 15 நாள் காவலில் வைக்க நீதிமன்றம் உத்தரவிட்டது. அதன்பின் ஜாமீன் கேட்டு தினகரன் தரப்பில் மனு தாக்கல் செய்யப்பட்டது. அதேநேரத்தில், அவரிடம் சென்னை, கொச்சி, பெங்களூரு ஆகிய இடங்களுக்கு அழைத்துச் சென்று விசாரணை நடத்த வேண்டியுள்ளதால், ஒரு வாரம் போலீஸ் காவலில் வைத்து விசாரிக்க அனுமதிக்க வேண்டும் என்று தில்லி போலீஸார் கோரிக்கை விடுத்தனர். அதை ஏற்றுக் கொண்ட நீதிபதி, 5 நாள் போலீஸ் காவலில் வைத்து விசாரிக்க அனுமதி வழங்கி உத்தரவிட்டார்.
இதைத்தொடர்ந்து தினகரனை சென்னைக்கு அழைத்து வந்து விசாரிக்க தில்லி போலீஸார் முடிவு செய்து, அவரை வியாழக்கிழமை காலை 9.55 மணிக்கு தில்லியில் இருந்து விமானம் மூலம் சென்னைக்குக் கொண்டுவந்தனர். அவருடன் அவரது நண்பர் மல்லிகார்ஜுனனையும் உடன் அழைத்து வந்தனர். சென்னை விமான நிலையத்துக்கு பகல் 12.50 மணிக்கு வந்த தில்லி போலீஸார், பலத்த பாதுகாப்புடன் தினகரனை அவரது வீட்டுக்கு அழைத்துச் சென்று விசாரணை நடத்தினர். அதன், பின்பு பெசன்ட் நகரில் உள்ள சிபிஐ அலுவலகத்தில் அவரிடம் விசாரணை நடத்தினர். விசாôரணை வியாழக்கிழமை இரவு வரை நீடித்தது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கிராம பகுதிகளில் சூறாவளி காற்றுடன் கன மழை: வாழை பயிர் சேதம்

இங்க நான் தான் கிங்கு படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பு - புகைப்படங்கள்

குஜராத் டைட்டன்ஸ் பேட்டிங்; அணியில் இரண்டு மாற்றங்கள்!

இந்திய அரசமைப்பின் மீது முழுவீச்சில் தாக்குதல் -ராகுல் காந்தி

கண்டநாள் முதல்..

SCROLL FOR NEXT