இந்தியா

ஐஏஎஸ் அதிகாரி மகளுக்கு தொல்லை கொடுத்த பாஜக தலைவர் மகன் கைது: மோடி, அமித்ஷா மவுனம் சாதிப்பது ஏன்?

DIN

புதுதில்லி: ஐஏஎஸ் அதிகாரி மகளை பின்தொடர்ந்த அரியானா பாஜக தலைவர் மகன் கைது செய்யப்பட்ட விவகாரத்தில் பிரதமர் நரேந்திர மோடி, பாஜக தலைவர் அமித்ஷா மவுனமாக இருப்பது ஏன் என்று மார்க்சிஸ்ட் கட்சி பொதுச் செயலாளர் சீதாராம் யெச்சூரி கேள்வி எழுப்பியுள்ளார்.

அரியானா மாநில பாஜக தலைவர் சுபாஷ் பராலாவின் மகன் விகாஸ் பராலா, வெள்ளிக்கிழமை இரவு தனது நண்பரான ஆஷிஷ் குமார் என்பவருடன் சேர்ந்து பெண் ஒருவரை பின்தொடர்ந்து தொல்லை கொடுத்ததாக தெரிகிறது. ஐஏஎஸ் அதிகாரி ஒருவரின் மகளான அந்த பெண், இது குறித்து போலீஸில் புகார் அளித்தார்.

அவர் கொடுத்த புகாரின் பேரில் அவர்களை நேற்று சனிக்கிழமை போலீஸார் கைது செய்தனர். விகாஸ் பராலா மற்றும் அவரது நண்பரை மீது இந்திய தண்டனை சட்டம், பிரிவு 354 டி (பின்தொடர்தல்) மற்றும் மோட்டார் வாகன சட்டம், பிரிவு 185 (மது அருந்திவிட்டு ஓட்டுதல் அல்லது போதையில் ஓட்டுதல்) ஆகிய பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டது. பின்னர், ஜாமீனில் விடுவிக்கப்பட்டனர்.

இந்நிலையில், தனது டுவிட்டர் பக்கத்தில் கருத்து தெரிவித்துள்ள மார்க்சிஸ்ட் கட்சி பொதுச் செயலாளர் சீதாராம் யெச்சூரி, பெண்ணை பின் தொடர்ந்து தொல்லை கொடுத்ததாக பாஜக தலைவர் மகன் கைது செய்யப்பட்ட விவகாரத்தில் பிரதமர் நரேந்திர மோடி, பாஜக தலைவர் அமித்ஷா மவுனமாக இருப்பது ஏன் என்று கேள்வி எழுப்பியுள்ளார்.

மேலும், குற்றவாளிகளுக்கு யாரோ உதவி செய்துள்ளார்கள் என்பது தெளிவாக தெரிகிறது என தெரிவித்துள்ளார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

முதல்வன் பட பாணியில் சிஎஸ்கேவை வம்பிழுத்த பஞ்சாப் அணி!

நகர்ப்புறங்களிலும் 100 நாள் வேலை உறுதித்திட்டம் -பிரியங்கா காந்தி வாக்குறுதி

ஹெலிகாப்டருக்குள் தவறி விழுந்தார் மம்தா பானர்ஜி!

வெற்றி பெற்றாரா ரத்னம்? - திரைவிமர்சனம்!

மக்களுக்காக அனைத்து துறையினரும் ஒருங்கிணைந்து செயல்பட வேண்டும்: முதல்வர் வலியுறுத்தல்

SCROLL FOR NEXT