இந்தியா

பாகிஸ்தான் துப்பாக்கிச் சூடு: இந்திய வீரர்கள் 3 பேர் காயம்

DIN

ஜம்மு-காஷ்மீர் எல்லைப் பகுதியில் பாகிஸ்தான் ராணுவம் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் இந்திய ராணுவ வீரர்கள் 3 பேர் காயமடைந்தனர்.

ஜம்மு-காஷ்மீரின் எல்லையில் அமைந்துள்ள பாராமுல்லா மாவட்டத்தின் உரி பகுதியில் பாகிஸ்தான் ராணுவத்தினர் போர் நிறுத்த ஒப்பந்தத்தை மீறி ஞாயிற்றுக்கிழமை மாலை துப்பாக்கிச் சூடு நடத்தினர்.
இதனையடுத்து, பாகிஸ்தான் எல்லையில் இந்திய ராணுவத்தினரும் பதிலடித் தாக்குதல் நடத்தினர். இந்தத் துப்பாக்கிச் சண்டையில் இந்திய ராணுவ வீரர்கள் 3 பேர் காயமடைந்தனர். அவர்கள் அங்குள்ள ராணுவ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். அங்கு இரு தரப்புக்கும் இடையே தொடர்ந்து துப்பாக்கிச் சண்டை நடைபெற்று வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
முன்னதாக, ஜம்மு-காஷ்மீர் மாநிலம் பூஞ்ச் மாவட்டத்தில் எல்லைக் கட்டுப்பாட்டுப் பகுதி நெடுகிலும் ஞாயிற்றுக்கிழமை அதிகாலை பாகிஸ்தான் ராணுவத்தினர் தாக்குதல் நடத்தினர். எனினும், இந்தத் தாக்குதலில் இந்திய தரப்பில் யாருக்கும் காயம் ஏதும் ஏற்படவில்லை. பூஞ்ச் பகுதியில் பாகிஸ்தான் படையினர் கடந்த சனிக்கிழமை நடத்திய தாக்குதலில் ராணுவ அதிகாரி ஒருவரும், ஒரு பெண்ணும் உயிரிழந்தனர். இதே பகுதியில், கடந்த 8-ஆம் தேதி பாகிஸ்தான் படையினர் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் இந்திய வீரர் ஒருவர் உயிரிழந்தது குறிப்பிடத்தக்கது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ஜிம்பாப்வேவுக்கு எதிரான டி20 தொடரைக் கைப்பற்றிய வங்கதேசம்!

தில்லி கேப்பிடல்ஸ் பேட்டிங்; 2 வெளிநாட்டு வீரர்கள் அறிமுகம்!

‘லா லா லேண்ட்..’ மீனாட்சி செளத்ரி!

முந்தானையில் சிக்கியது மனம்!

சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் ஐபிஎல் போட்டி! டிக்கெட் விற்பனை எப்போது? | செய்திகள்: சிலவரிகள் | 07.05.2024

SCROLL FOR NEXT