இந்தியா

6 அதிநவீன போர் ஹெலிகாப்டர்கள் வாங்க ஒப்புதல்

DIN

இந்திய ராணுவத்துக்கு ரூ.4,168 கோடி மதிப்பிலான 6 போர் ஹெலிகாப்டர்களை வாங்குவதற்கு பாதுகாப்புத் துறை அமைச்சகம் ஒப்புதல் அளித்துள்ளது. இதுவரை இத்தகைய அதிநவீன போர் ஹெலிகாப்டர்கள் ராணுவம் வசம் இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.
தில்லியில் பாதுகாப்பு கொள்முதல் கவுன்சில் (டிஏசி) கூட்டம் வியாழக்கிழமை நடைபெற்றது. பாதுகாப்புத் துறை அமைச்சர் அருண் ஜேட்லி தலைமையில் நடைபெற்ற இக்கூட்டத்தில் பல்வேறு முக்கிய விவகாரங்கள் குறித்து விவாதிக்கப்பட்டன. எதிரிப் படைகளின் விமானங்களைத் தாக்கவல்ல நவீன போர் ஹெலிகாப்டர்களை வாங்குவது குறித்தும் ஆலோசிக்கப்பட்டது. ரூ.4,168 கோடி செலவில் 6 ஹெலிகாப்டர்களை புதிதாக வாங்குவது தொடர்பாக விவாதிக்கப்பட்டு இறுதியில் அதற்கு ஒப்புதல் அளிக்கப்பட்டது. இதேபோன்று கடற்படை கப்பல்களுக்கு நவீன டர்பைன் எஞ்சின்களை ரூ.490 கோடி செலவில் வாங்குவதற்கும் கூட்டத்தில் இசைவு தெரிவிக்கப்பட்டதாக பாதுகாப்புத் துறை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

உதகை, கொடைக்கானல் செல்பவர்களுக்கு இ-பாஸ்!

ரசவாதி படத்தின் டிரெய்லர்

ஐரோப்பாவின் சாதனைப் பெண்மணி தெரேசா விசெண்டேவுக்கு ’பசுமை நோபல்’ விருது

செம்பூவே... ஐஸ்வர்யா ராஜேஷ்!

அறிவியல் ஆயிரம்: நெருப்பு ஊர்வலங்கள்... சூரிய தோரணங்கள்

SCROLL FOR NEXT