இந்தியா

குஜராத்: பன்றிக் காய்ச்சலுக்கு 230 பேர் பலி

DIN

குஜராத்தில் வேகமாகப் பரவி வரும் பன்றிக் காய்ச்சலுக்கு நிகழாண்டில் 230 பேர் பலியானதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
இதனிடையே, நிலைமையை நேரில் ஆய்வு செய்ய அரசு மருத்துவமனைகளுக்கு மாநில முதல்வர் விஜய் ரூபானி வியாழக்கிழமை சென்றார்.
அங்கு மருத்துவர்களிடமும், சுகாதாரத் துறை அதிகாரிகளிடமும் நிலைமையைக் கேட்டறிந்த அவர், சிறப்பு சிகிச்சைப் பிரிவுகளைப் பார்வையிட்டார்.
குஜராத் மாநிலத்தில் பன்றிக் காய்ச்சலின் தாக்கம் தீவிரமாகியுள்ளது. ஏறத்தாழ 2,500 பேருக்கு அந்தக் காய்ச்சல் இருப்பது இதுவரை உறுதி செய்யப்பட்டுள்ளது.
பன்றிக் காய்ச்சலை தோற்றுவிக்கும் ஹெச்1என்1 வைரஸ் பரவாமல் தடுப்பதற்கான நடவடிக்கைகளை மாநில அரசு மேற்கொண்டு வரும் நிலையிலும், அதன் தாக்கம் அதிகரித்துக் கொண்டே வருவதாகக் கூறப்படுகிறது.
வியாழக்கிழமை நிலவரப்படி குஜராத்தின் பல்வேறு மாவட்டங்களைச் சேர்ந்த 230 பேர் இதுவரை பன்றிக் காய்ச்சலுக்கு பலியானதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.
இந்நிலையில், ஆமதாபாத், வதோரா, ராஜ்கோட், சூரத் ஆகிய நகரங்களில் அமைந்துள்ள அரசு மருத்துவமனைகளுக்குச் சென்று பார்வையிட்ட முதல்வர் விஜய் ரூபானி, செய்தியாளர்களிடம் கூறியதாவது:
மாநிலத்தில் பன்றிக் காய்ச்சலைக் கட்டுப்படுத்த தீவிர நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. மருத்துவமனைகளில் இதற்காக சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. இவை அனைத்தையும் தாண்டி மத்திய அரசின் உதவியும் கோரப்பட்டுள்ளது. மருத்துவ நிபுணர்களை குஜராத் அனுப்பி வைக்குமாறு வலியுறுத்தப்பட்டுள்ளது என்றார் அவர்.
பஞ்சாபில் 15 பேர்: இதனிடையே, பஞ்சாபில் பன்றிக் காயச்சலுக்கு 15 பேர் பலியானதாக அந்த மாநில அரசு தகவல் வெளியிட்டுள்ளது. அதனைக் கட்டுப்படுத்தத் தேவையான அனைத்து நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டு வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

காரல் மாா்க்ஸ் பிறந்தநாள் விழா

3 மணி நேர போராட்டம்: ஸ்வியாடெக் முதல் முறை சாம்பியன்

இன்று வெளியாகிறது பிளஸ் 2 தோ்வு முடிவுகள்

வித்யா குரு அலங்காரத்தில் முனீஸ்வரா்...

துளிகள்...

SCROLL FOR NEXT