இந்தியா

தென்மாநிலங்களில் கனமழைக்கு வாய்ப்பு: மத்திய அரசு எச்சரிக்கை

அடுத்த 3 நாட்களில் தமிழகம் உள்ளிட்ட தென் மாநிலங்களில் கனமழைக்கு வாய்ப்புள்ளதாக மத்திய அரசு சார்பில் எச்சரிக்கை விடப்பட்டுள்ளது.

DIN

காலம் தவறி பெய்து வரும் கனமழை காரணமாக தற்போது பெரும்பாலான மாநிலங்கள் தவித்து வருகிறது. குறிப்பாக பீகார், மஹாராஷ்டிரம் உள்ளிட்ட மாநிலங்களில் தற்போது வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு உள்ளது.

இந்நிலையில், அடுத்த 3 நாட்களுக்கு தமிழகம் உள்ளிட்ட தென் மாநிலங்களில் கனமழைக்கு வாய்ப்புள்ளதாக மத்திய அரசு எச்சரித்துள்ளது.

தமிழகம், கேரளம், ஆந்திரம், கர்நாடகம், தெலுங்கானா ஆகிய மாநிலங்களில் கனமழை பெய்யும். இதனால் வெள்ளப்பெருக்கு ஏற்பட வாய்ப்புள்ளது. ஆற்றங்கரை ஓரமாக வசிக்கும் மக்கள் பாதுகாப்பான இடங்களுக்குச் செல்ல வேண்டும்.

நதிகளில் வெள்ளப்பெருக்கும் இருக்கும். எனவே மாநில அரசாங்கம் எச்சரிக்கை நடவடிக்கைகளில் தயார் நிலையில் இருக்க வேண்டும்.

பேரிடர் கால மீட்பு நடவடிக்கை தொடர்பான அனைத்திலும் பாதுகாப்பாக இருக்க வேண்டும் என்று எச்சரித்துள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

ஐடி பங்குகள் உயர்வு! இன்றைய பங்குச் சந்தை நிலவரம்...

ஊழியர்களைக் கட்டிப்போட்டு வங்கியில் பணம், நகை கொள்ளை!

கரூரில் இன்று மாலை திமுக முப்பெரும் விழா! குளித்தலை சிவராமன் இல்லம் சென்று உதயநிதி ஆறுதல்!!

கைகுலுக்க மறுத்த விவகாரம்: பாகிஸ்தான் போட்டிகளில் இருந்து நடுவர் பைகிராஃப்ட் நீக்கம்!

மாணவர்களுக்கு கல்வி கடன் வட்டி தள்ளுபடி: முதல்வர் நிதிஷ் குமார் அறிவிப்பு

SCROLL FOR NEXT