இந்தியா

பெண்களுக்கு எதிரான குற்றங்கள் அதிகரிப்பு: மத்திய அரசு மீது பிரகாஷ் காரத் குற்றச்சாட்டு

DIN

நாட்டில் பெண்களுக்கு எதிரான குற்றங்கள் அதிகரிக்கும் நிலையில், அவற்றைத் தடுக்க மத்திய அரசு உரிய நடவடிக்கை மேற்கொள்ளவில்லை என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் முன்னாள் பொதுச் செயலாளர் பிரகாஷ் காரத் குற்றம்சாட்டியுள்ளார்.
இது தொடர்பாக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் அதிகாரப்பூர்வ பத்திரிகையில் அவர் எழுதியுள்ள கட்டுரையில் கூறப்பட்டுள்ளதாவது:
நாட்டில் பெண்களுக்கும், குழந்தைகளுக்கும் எதிராக பாலியல் குற்றங்கள் அதிகரித்துள்ளது தேசிய குற்ற ஆவணக் காப்பகத்தின் சமீபத்திய அறிக்கை மூலம் தெரியவந்துள்ளது. கடந்த 2014-ஆம் ஆண்டு மக்களவைத் தேர்தலின்போது பெண்கள், குழந்தைகளின் பாதுகாப்பை உறுதி செய்வோம் என்று பாஜக தனது தேர்தல் அறிக்கையில் கூறியிருந்தது.
இப்போது, அவர்களது மூன்றரை ஆண்டுகால ஆட்சியில் பெண்கள், குழந்தைகளுக்கு எதிரான குற்றங்கள் அதிக அளவில் நிகழ்கின்றன. இக்குற்றங்களைத் தடுக்க மத்திய அரசு உரிய நடவடிக்கை எடுக்கவில்லை என்பதுதான் இங்குள்ள முக்கியப் பிரச்னை. காவல் துறை உள்ளிட்ட குற்றத் தடுப்பு அமைப்புகளை மத்திய அரசு முழுவீச்சில் செயல்பட அனுமதிக்க வேண்டும். பெண்களுக்கு எதிரான குற்றங்களைத் தடுப்பதற்கான சட்டங்களை எவ்வித பாரபட்சமுமின்றி கடுமையாக அமல்படுத்த வேண்டும்.
பாலியல் கொடுமையால் பாதிக்கப்பட்ட பெண்களுக்கு உரிய சமூகப் பாதுகாப்பு அளிக்கப்பட வேண்டும். இதற்காக, ஒதுக்கப்பட்ட நிர்பயா நிதியை மத்திய அரசு உரிய முறையில் பயன்படுத்தவில்லை. 
2015-ஆம் ஆண்டு உருவாக்கப்பட்ட இந்த நிதியில் இப்போது ரூ.3,100 கோடி உள்ளது. இதில் 8.5 சதவீத நிதியை மட்டுமே இதுவரை மத்திய அரசு செலவிட்டுள்ளது என்று அந்தக் கட்டுரையில் பிரகாஷ் காரத் கூறியுள்ளார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

அல்-ஜஸீரா தடை: போர் நிறுத்த பேச்சுவார்த்தையை எவ்வாறு பாதிக்கும்?

உயிர் தமிழுக்கு பட விழா - புகைப்படங்கள்

கண்ணுக்குள்ளே!

பஞ்சாபை வீழ்த்தி சிஎஸ்கே அசத்தல்; புள்ளிப்பட்டியலில் 3-வது இடத்துக்கு முன்னேற்றம்!

மோடியிடம் விளக்கம் கேட்பதற்கே தேர்தல் ஆணையம் அஞ்சுகிறது: திருமாவளவன் பேட்டி

SCROLL FOR NEXT