இந்தியா

ராஜாஜி பிறந்த தினம்: நாடாளுமன்றத்தில் தலைவர்கள் மரியாதை

DIN

மூதறிஞர் ராஜாஜியின் பிறந்த தினத்தையொட்டி, தில்லி நாடாளுமன்ற வளாகத்தில் அவரது திருவுருவப் படத்துக்கு தலைவர்கள் ஞாயிற்றுக்கிழமை மரியாதை செலுத்தினர்.
தமிழகத்தைச் சேர்ந்த சக்ரவர்த்தி ராஜகோபாலாச்சாரி, அனைவராலும் ராஜாஜி என்று அழைக்கப்பட்டவர். புகழ்பெற்ற சுதந்திரப் போராட்ட வீரராகவும் திறமைமிக்க தலைவராகவும் மிளிர்ந்தவர். தமிழகத்தின் முதல்வராகவும், இந்திய தேசிய காங்கிரஸின் தலைவராகவும் இருந்தவரான ராஜாஜி, இந்தியாவின் முதல் வைசிராயாகவும், கடைசி கவர்னர் ஜெனரலாகவும் பதவி வகித்தவர்.
டிசம்பர் 10-ஆம் தேதி ராஜாஜியின் பிறந்த தினம் ஆகும். இதையொட்டி, தில்லி நாடாளுமன்ற வளாகத்தின் மைய அரங்கில் வைக்கப்பட்டுள்ள ராஜாஜியின் திருவுருவப் படத்திற்கு, மக்களவைத் துணைத் தலைவர் எம்.தம்பிதுரை, நாடாளுமன்ற விவகாரங்கள் துறை இணையமைச்சர் விஜய் கோயல், முன்னாள் துணை பிரதமரும், மக்களவை நெறிகள் குழு தலைவருமான எல்.கே. அத்வானி உள்ளிட்டோர் ஞாயிற்றுக்கிழமை மலர் தூவி மரியாதை செலுத்தினர்.
நாடாளுமன்ற முன்னாள், இன்னாள் உறுப்பினர்கள், மக்களவை செயலக செக்ரட்டரி ஜெனரல் ஸ்நேஹலதா ஸ்ரீவஸ்தவா, மக்களவை, மாநிலங்களவையின் மூத்த அதிகாரிகள் ஆகியோரும் மலர் மரியாதை செலுத்தினர். 
ராஜாஜியின் வாழ்க்கை வரலாறு குறித்து ஆங்கிலம், ஹிந்தியில் மக்களவைச் செயலகம் மூலம் தயாரிக்கப்பட்ட சிறு கையேடு நிகழ்ச்சியில் பங்கேற்றவர்களுக்கு வழங்கப்பட்டது. 
தேசத்திற்கு ராஜாஜி ஆற்றிய பணிகளை போற்றும் வகையில் அவரது திருவுருவப் படம் நாடாளுமன்ற மைய அரங்கில் 1978-ஆம் ஆண்டு ஆகஸ்ட் 21-ஆம் தேதி அப்போதைய குடியரசுத் தலைவர் டாக்டர் என். சஞ்சீவ ரெட்டி மூலம் திறந்துவைக்கப்பட்டது நினைவுகூரத்தக்கது. 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

சீனாவை தாக்கிய புயல்: 5 பேர் பலி; 33 பேர் காயம்

இன்றைய ராசி பலன்கள்!

இன்று யோகமான நாள்!

பயிா்களை சேதப்படுத்திய யானைக் கூட்டம்

பிரதமா் மோடியை ‘சக்திவாய்ந்தவராக’ சித்தரிக்கும் பாஜக: குஜராத்தில் பிரியங்கா விமா்சனம்

SCROLL FOR NEXT