இந்தியா

கேரளத்தில் பாஜகவுக்கு காங்கிரஸ் கட்சி உதவுகிறது: பிருந்தா காரத்

DIN

கேரளத்தில் பாஜக-ஆர்எஸ்எஸ் ஆகியவற்றுக்கு காங்கிரஸ் கட்சி உதவி செய்வதாக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி புகார் தெரிவித்துள்ளது.
இதுதொடர்பாக ஹைதராபாதில் அக்கட்சியின் மூத்த தலைவர் பிருந்தா காரத், பிடிஐ செய்தியாளருக்கு அளித்த பேட்டியில் தெரிவித்திருப்பதாவது:
கேரளத்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிக்கு எதிராக வெறுப்புணர்வு பிரசாரத்தில் பாஜகவும், ஆர்எஸ்எஸ்சும் ஈடுபட்டுள்ளன. மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சித் தொண்டர்களை அவர்கள் கொலை செய்கின்றனர். இந்நடவடிக்கைக்கு காங்கிரஸ் கட்சி உதவி செய்து வருகிறது.
இதை ஏன் செய்கிறார்கள்? ஏனெனில் கேரளத்தில் தாங்கள் வளர்ச்சியடைவதற்கு எங்கள் கட்சி முக்கியத் தடை கல்லாக இருப்பதாக அவர்கள் (பாஜக) நினைக்கிறார்கள். இந்த விவகாரத்தில் காங்கிரஸ் கட்சியின் நிலைப்பாடு என்ன? மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிக்கு எதிரான பாஜக-ஆர்எஸ்எஸ் பிரசாரத்துக்கு காங்கிரஸ் கட்சி உதவி செய்து வருகிறது. இதையே தங்களது முக்கிய நோக்கமாக கொண்டு செயல்பட்டு வருகின்றனர். எனவே, கேரளத்தில் காங்கிரஸ் கட்சியின் நிலைப்பாடு என்ன என்பது குறித்து அக்கட்சித் தலைவர் ராகுல் காந்தி தெரிவிக்க வேண்டும் என்று பிருந்தா காரத் கேட்டுக் கொண்டார்.
முன்னதாக, கேரள அரசியல் விவகாரம் குறித்து ராகுல் காந்தி பேசியபோது, நாட்டில் பாஜகவுக்கு எதிரான போராட்டம் மற்றும் பாசிச சக்திகளுக்கு எதிரான போராட்டம் ஆகியவற்றில் தங்களது நிலைப்பாட்டை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி தெரிவிக்க வேண்டும் என்று வலியுறுத்தியிருந்தார். இதற்கு பதிலளிக்கும் வகையில் பிருந்தா காரத் இந்த குற்றச்சாட்டை முன்வைத்துள்ளார். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

சுனிதா வில்லியம்ஸ் விண்வெளி பயணம் ஒத்திவைப்பு!

3-ஆம் கட்ட தோ்தலில் அதிகளவில் வாக்களிக்க வேண்டும் -பிரதமர் மோடி

குஜராத்தில் வாக்களித்தார் பிரதமர் மோடி

இன்று யோகம் யாருக்கு?

இன்றைய நாள் உங்களுக்கு எப்படி?

SCROLL FOR NEXT