இந்தியா

காங்கிரஸ் கட்சியை ஹிமாசலப் பிரதேசம் புறக்கணித்துள்ளது: முதல்வர் ஜெய்ராம் தாக்குர்

Raghavendran

ஹிமாசலப் பிரதேசத்தில் சமீபத்தில் நடந்து முடிந்த சட்டப்பேரவைத் தேர்தலில் பாஜக அபார வெற்றிபெற்றது. இதையடுத்து அக்கட்சி அங்கு ஆட்சி அமைத்தது. அம்மாநில முதல்வராக ஜெய்ராம் தாக்குர் தேர்வு செய்யப்பட்டார்.

இதையடுத்து அங்கு காங்கிரஸ் தலைவர் ராகுல் தலைமையில் கட்சிக் கூட்டம் நடைபெற்றது. அதில், அம்மாநிலத்தில் ஆளும் கட்சியாக இருந்த காங்கிரஸ் தோல்விக்கு அக்கட்சியே காரணம் என்று குற்றஞ்சாட்டியுள்ளார்.

இதையடுத்து ஹிமாசல் முதல்வர் ஜெய்ராம் தாக்குர், செய்தியாளர்களை சனிக்கிழமை சந்தித்தார். அப்போது அவர் பேசியதாவது:

ஹிமாசலப் பிரதேசத்தில் காங்கிரஸ் தோல்வியடைந்துள்ளது குறித்து ராகுல் தெரிவித்தது குறித்து நான் கருத்து எதுவும் கூற விரும்பவில்லை. ஆனால் ஒன்று மட்டும் நிதர்சனம், மக்கள் காங்கிரஸை புறக்கணித்துவிட்டனர்.

பாஜக-வின் மீது மிகுந்த நம்பிக்கை வைத்து ஆட்சி அமைக்க வாய்ப்பு வழங்கி உள்ளனர். இதனை ராகுல் ஏற்றுக்கொள்ளத்தான் வேண்டும். நாங்கள் இங்கே ஆட்சி அமைத்துள்ளது மாநில வளர்ச்சிக்காவும், மக்களின் முன்னேற்றத்துக்காகவும் மட்டுமே தவிர பழிவாங்க அல்ல.

முன்னாள் முதல்வர் வீரபத்திர சிங் மீதான ஊழல் வழக்குகள் நீதிமன்றத்தில் உள்ளது. அதில், அரசு எதுவும் செய்வதற்கில்லை. கடந்த 6 மாதங்களுக்கும் மேலாக அரசியல் லாபத்துக்காக காங்கிரஸ் கட்சி சில நடவடிக்கைகளில் ஈடுபட்டு வந்தது. அவை அனைத்தும் சீர்செய்யப்படும் என்றார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பிரஜ்வல் ரேவண்ணா பாலியல் வழக்கு: பாதிக்கப்பட்ட பெண்கள் புகாரளிக்க உதவி எண் வெளியீடு!

பொறியியல் கலந்தாய்வு: முதல்நாளில் 20 ஆயிரத்திற்கும் அதிகமானோர் விண்ணப்பம்!

முதலைகள் சுற்றித் திரியும் ஆற்றில் மகனை வீசிய தாய் கைது!

ஷஷாங் சிங்குக்கு பரிசளித்த எம்.எஸ்.தோனி!

உங்களுக்குப் பிடித்த படம் எது? கேட்பது யாஷிகா ஆனந்த்...

SCROLL FOR NEXT