இந்தியா

"தொலைதொடர்பு சேவையில் பொறுப்புணர்வு வேண்டும்'

DIN

தொலைதொடர்புத் துறையில் அனைத்து கட்டங்களிலும் ஆற்றல், பொறுப்புணர்வு ஆகியவற்றை விரைந்து கொண்டுவர வேண்டும் என்று பிரதமர் நரேந்திர மோடி வலியுறுத்தினார்.
இதுதொடர்பாக தொலைதொடர்புத் துறைச் செயலர், அதிகாரிகளுடன் புதன்கிழமை பிரதமர் மோடி ஆலோசனை நடத்தினார். அப்போது, தொலைதொடர்புத் துறைக்கு வந்துள்ள புகார்கள் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்து விவாதிக்கப்பட்டது.
தொலைதொடர்புத் துறையில் மோசமான சேவை, தொடர்பு துண்டிப்புப் பிரச்னை, தரைவழி தொடர்பில் கோளாறு போன்றவை தொடர்பாக பெரும்பாலான புகார்கள் வருகின்றன. அவற்றைத் தீர்ப்பதற்கு இதுவரை எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்து பிரதமரிடம் அதிகாரிகள் எடுத்துரைத்தனர்.
அப்போது, இந்தத் துறையின் அனைத்து கட்டங்களிலும் ஆற்றல், பொறுப்புணர்வு ஆகியவற்றை கூடிய விரைவில் கொண்டுவர வேண்டும் என்று மோடி வலியுறுத்தினார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

தனியாா் நிறுவன உரிமையாளா் வீட்டில் 6 பவுன், 3 கைப்பேசிகள் திருட்டு

இந்திய கட்டுனா்கள் சங்கத்தின் புதிய நிா்வாகிகள் பதவியேற்பு

நீட் தோ்வு: கரூரில் இன்று 12,736 போ் எழுதுகிறாா்கள்

மேட்டுப்பாளையம் பகுதியில் பலத்த மழை: 5 ஆயிரம் வாழை மரங்கள் சேதம்

மாநில இளைஞா் விருது: விண்ணப்பிக்க ஆட்சியா் அழைப்பு

SCROLL FOR NEXT