இந்தியா

5 மாநில தேர்தலும் தேர்தல் ஆணையத்தின் கிடுக்கிப் பிடியும்

DIN


புது தில்லி: உத்தரப் பிரதேசம் உள்ளிட்ட 5 மாநில சட்டப் பேரவைகளுக்கான தேர்தல் அட்டவணையை தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.

அதோடு, 5 மாநிலங்களில் நடக்கும் தேர்தலில் போட்டியிடும் கட்சிகளுக்கும் ஏராளமான விதிமுறைகள் விதிக்கப்பட்டுள்ளன.

பிப்ரவரி 4 முதல் மார்ச் 8-ஆம் தேதி வரை பல கட்டங்களாக வாக்குப் பதிவு நடைபெறவுள்ளது. மார்ச் 11-ஆம் தேதி வாக்குகள் எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்படவுள்ளன.

உத்தரப் பிரதேச சட்டப் பேரவைத் தேர்தல் பிப்ரவரி 11 முதல் மார்ச் 8-ஆம் தேதி வரை 7 கட்டங்களாக நடைபெறவுள்ளது. பஞ்சாப், கோவா மாநிலங்களில் பிப்ரவரி 4-ஆம் தேதியும், உத்தரகண்ட் மாநிலத்தில் பிப்ரவரி 15-ஆம் தேதியும், மணிப்பூரில் மார்ச் 4, 8 ஆகிய தேதிகளில் இருகட்டங்களாகவும் பேரவைத் தேர்தல் நடைபெறவுள்ளது.

இதில், சில முக்கிய விதிமுறைகள் அறிவிக்கப்பட்டுள்ளன. அதாவது, ஒரு கட்சியின் வேட்பாளரைப் பற்றிய எந்த விதமான செய்தியும், அந்த கட்சிக்கு சொந்தமான தொலைக்காட்சியில் ஒளிபரப்பப்பட்டால் அதற்கான செலவும் வேட்பாளரின் செலவு கணக்கில் சேர்க்கப்படும்.

மேலும், தேர்தலில் போட்டியிடும் எந்த வேட்பாளரும், அரசுக்கு செலுத்த வேண்டிய எந்த கட்டணம் மற்றும் வரியை பாக்கி வைத்திருக்கக் கூடாது.

மத அல்லது ஜாதி ரீதியாக யாரும் வாக்கு சேகரிக்கக் கூடாது. இது தொடர்பாக உச்ச நீதிமன்றத்தின் சமீபத்திய உத்தரவை தேர்தல் ஆணையம் தீவிரமாக செயல்படுத்த உள்ளது.

மணிப்பூர் மற்றும் உத்தரகாண்ட் மாநிலங்களில் நடைபெற உள்ள தேர்தலில், வாக்குப்பதிவு இயந்திரங்களில் வேட்பாளர்களின் புகைப்படங்கள் இடம்பெற உள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ஏற்காட்டில் பேருந்து விபத்து : 4 பேர் பலி

கண்ணெதிரே 3 ஐசிசி கோப்பைகள்; பாகிஸ்தான் பயிற்சியாளர் கேரி கிறிஸ்டனின் இலக்கு என்ன?

சின்ன சின்ன பார்வை..!

போஜ்புரி போகன்வில்லா..!

லக்னௌ பந்துவீச்சு; அணியில் டி காக் இல்லை!

SCROLL FOR NEXT