இந்தியா

ஜம்மு-காஷ்மீரில் துப்பாக்கிச் சூடு: பயங்கரவாதி சுட்டுக் கொலை

ஜம்மு-காஷ்மீர்: ஜம்மு-காஷ்மீர் மாநிலம் பண்டிபோரா மாவட்டத்தில் பாதுகாப்பு படைவீரர்களுக்கும், பயங்கரவாதிகளுக்கும்

PTI

ஸ்ரீநகர்: ஜம்மு-காஷ்மீர் மாநிலம் வடக்கு பண்டிபோரா மாவட்டத்தில் பாதுகாப்பு படைவீரர்களுக்கும், பயங்கரவாதிகளுக்கும் இடையே நடந்த துப்பாக்கிச் சூட்டில் பயங்கரவாதி ஒருவன் சுட்டுக் கொல்லப்பட்டதாக போலீஸார் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
காஷ்மீரின் பந்திபோரா மாவட்டம் ஹைஜின் கிராமபகுதியில் பயங்கரவாதிகளின் நடமாட்டம் இருப்பதாக உளவுத்துறைக்கு ரகசிய கிடைத்தது. இதனையடுத்து பாதுகாப்பு படையினர் கிராமபகுதிக்கு விரைந்து சென்று பயங்கரவாதிகளை தேடும் பணியில் ஈடுபட்டு வந்தனர். அப்போது, பதுங்கி இருந்த பயங்கரவாதிகள் பாதுகாப்பு படையினர் மீது துப்பாக்கி சூடு நடத்தினர். இதில் ராணுவ வீரர் ஒருவர் காயம் அடைந்தார். இதனையடுத்து பாதுகாப்பு படையினர் கொடுத்த பதிலடியில் ஒரு பயங்கரவாதி சுட்டுக் கொல்லப்பட்டான்.
சுட்டுக் கொல்லப்பட்ட பயங்கரவாதி யார்? எந்த இயக்கத்தை சேர்ந்தவன்? என்பது உடனடியாக தெரியவரவில்லை. விசாரணை தொடர்ந்து நடைபெற்றுகிறது. பாதுகாப்பு படையினர் அப்பகுதியில் பயங்கரவாதிகளை தேடும் பணியில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.
ஜம்முவில் எல்லைக் கட்டுப்பாட்டுக் கோடு அருகேயுள்ள ராணுவப் பொறியாளர்கள் பிரிவு முகாம் மீது பயங்கரவாதிகள் நேற்று திங்கள்கிழமை அதிகாலை தாக்குதல் நடத்தினர். இதில், அந்த முகாமில் வேலை பார்த்து வந்த 3 தொழிலாளர்கள் கொல்லப்பட்டனர்.
இத்தாக்குதலில் 2 அல்லது அதற்கு மேற்பட்ட பயங்கரவாதிகள் ஈடுபட்டிருக்கலாம் என்றும், அவர்கள் எல்லை வழியாக ஊடுருவி வந்திருக்கக் கூடும் என்றும் சந்தேகிக்கப்படுகிறது.
ராணுவத்தினரும், போலீஸாரும் அப்பகுதியை சுற்றி வளைத்து, பயங்கரவாதிகளுக்கு எதிரான பதிலடி நடவடிக்கையை மேற்கொண்டு வருகின்றனர் என்று அந்த வட்டாரங்கள் தெரிவித்தன.
இந்நிலையில் அக்னூர் பகுதியில் உள்ள பள்ளி, கல்லூரிகளுக்கு இன்று விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

ரஞ்சி கோப்பை இறுதிப் போட்டியில் வெடித்த மோதல்: ஜம்மு காஷ்மீர் கேப்டனுக்கு 50% அபராதம்?

தேவா குரலில் வெளியான ஜெய்யின் புதிய படத்தின் பாடல்! இனையத்தில் வைரல்!

காலையில் எழுந்தவுடன் இந்த 5 விஷயங்களைச் செய்யுங்கள்!

டாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு 1 காசு குறைந்து ரூ. 90.96 ஆக நிறைவு!

இது தெரியுமா? பூமி சுற்றுவதை நம்மால் உணர முடிவதில்லையே, ஏன்?

SCROLL FOR NEXT