இந்தியா

பிஎஸ்எஃப் வீரர்களுக்கு தரமற்ற உணவு: பொது நல மனு மீது 16-இல் விசாரணை

DIN

எல்லைப் பாதுகாப்புப் படை வீரர்களுக்கு (பிஎஸ்எஃப்) தரமற்ற உணவு வழங்கப்படுவதாக தாக்கல் செய்யப்பட்ட பொது நல மனு மீது வரும் 16-ஆம் தேதி விசாரணை நடைபெறும் என்று தில்லி உயர் நீதிமன்றம் தெரிவித்துள்ளது.
பிஎஸ்எஃப் வீரர் தேஜ் பகதூர் யாதவ் என்பவர் அண்மையில் சமூக வலைதளங்களில் ஒரு விடியோ காட்சியை வெளியிட்டார். எல்லையைப் பாதுகாக்கும் வீரர்களுக்கு வழங்கப்படும் உணவு தரமற்ற வகையில் இருப்பதாக அந்த விடியோவில் அவர் குற்றம்சாட்டியிருந்தார்.
இதுதொடர்பான விசாரணைக்கு மத்திய உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் உடனடியாக உத்தரவிட்டார். இந்நிலையில், இந்த விவகாரம் தொடர்பாக பூரண் சந்த் ஆர்யா என்ற முன்னாள் ராணுவ வீரர் ஒருவர் தில்லி உயர் நீதிமன்றத்தில் பொது நல மனுவைத் தாக்கல் செய்திருந்தார்.
நாடு முழுவதும் உள்ள துணை ராணுவப் படையினருக்கு என்னென்ன உணவுகள் வழங்கப்படுகின்றன? அவை எவ்வாறு தயார் செய்யப்படுகின்றன? அவற்றுக்கு எத்தகைய பொருள்கள் பயன்படுத்தப்படுகின்றன? என்பன குறித்த விவரங்களை மத்திய அரசு தெரிவிக்க வேண்டும் என்று அந்த மனுவில் வலியுறுத்தப்பட்டிருந்தது.
இதுதொடர்பாக விரிவான அறிக்கையைத் தாக்கல் செய்யுமாறு மத்திய உள்துறை அமைச்சகத்துக்கும், துணை ராணுவப் படை நிர்வாகத்துக்கும் உயர் நீதிமன்றம் உத்தரவிட வேண்டும் என்றும் அதில் பூரண் சந்த் ஆர்யா கோரிக்கை விடுத்திருந்தார். இந்நிலையில், அந்த மனு, உயர் நீதிமன்ற நீதிபதி ஜி.ரோகிணி முன்பு வெள்ளிக்கிழமை விசாரணைக்கு வந்தது. அதனைப் பரிசீலித்த நீதிபதி, மனுவின் மீதான விசாரணையை வரும் திங்கள்கிழமைக்கு (ஜன.16) ஒத்திவைத்தார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

நல்ல நாள் ஆரம்பம்! ’இந்தியா’ கூட்டணி அரசு பொறுப்பேற்ற பின்.. -உத்தவ் தாக்கரே

கவின், ஆண்ட்ரியா நடிக்கும் படத்தின் தலைப்பு அறிவிப்பு!

’மோடியால் சமூகத்தில் பிளவு..’ -காங். தலைவர் கார்கே

பிறந்தநாளில் பிரஜ்வல் குறித்து வாய் திறந்த தேவ கௌடா!

மாலிவாலின் இடது கால், வலது கன்னத்தில் காயங்கள்: மருத்துவ அறிக்கை!

SCROLL FOR NEXT