இந்தியா

அரசு ஊழியர்கள் சொத்து விவரங்களை தாக்கல் செய்ய வேண்டியதில்லை: மத்திய அரசு

DIN

லோக்பால் சட்டத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளபடி, மத்திய அரசு ஊழியர்கள், தங்களது சொத்து விவரங்களை தற்போது தாக்கல் செய்ய வேண்டியதில்லை என்று மத்திய அரசு திடீரென அறிவித்துள்ளது.
இதுதொடர்பாக மத்திய பணியாளர் நலன் மற்றும் தேர்வுத் துறை வெளியிட்ட அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டிருப்பதாவது:
மத்திய அரசு ஊழியர்கள் தங்களது சொத்து விவரங்கள், பொறுப்புகள் ஆகிய விவரங்களை தற்போது தாக்கல் செய்ய வேண்டியதில்லை. இதுதொடர்பான புதிய விதிகளை வகுக்கும் பணியில் மத்திய அரசு தீவிரமாக ஈடுபட்டுள்ளது. அந்த விதிகள் வகுக்கப்பட்டதும், அரசு ஊழியர்கள் தங்களது சொத்து விவரங்களைத் தாக்கல் செய்வது தொடர்பான அறிவிப்பு வெளியிடப்படும் என்று அந்த அறிவிப்பில் மத்திய பணியாளர் நலன் மற்றும் பயிற்சித் துறை குறிப்பிட்டுள்ளது.
லோக்பால் சட்ட விதிகளின்படி, மத்திய அரசு ஊழியர்கள் தங்களது சொத்து விவரங்கள் உள்ளிட்டவற்றை அரசுக்கு ஒவ்வொரு ஆண்டும் மார்ச் மாதம் 31-ஆம் தேதியன்றோ அல்லது ஜூலை மாதம் 31-ஆம் தேதிக்கு முன்னதாகவோ தாக்கல் செய்ய வேண்டும்.
கடந்த 2014-ஆம் ஆண்டு மத்திய அரசு ஊழியர்கள் சொத்து விவரங்களை தாக்கல் செய்ய வேண்டிய கடைசி தேதி செப்டம்பர் மாதம் 15-ஆம் தேதி என்று அறிவிக்கப்பட்டது. பின்னர் அந்தக் காலக்கெடு முதலில் டிசம்பர் மாதத்துக்கும், பின்னர், ஏப்ரல் மற்றும் அக்டோபர் மாதத்துக்கும் நீட்டிக்கப்பட்டது.
இந்த தேதி, 2016-ஆம் ஆண்டுக்கான கணக்கு விவரங்களை தாக்கல் செய்ய வேண்டிய தேதியாக ஏப்ரல் மாதம் 15 மற்றும் ஜூலை மாதம் 31-ஆம் தேதிகள் அறிவிக்கப்பட்டன. இந்நிலையில், நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட லோக்பால், லோக் ஆயுக்தா சட்டத் திருத்த மசோதா மூலம், கடைசி தேதி டிசம்பர் மாதம் 31-ஆம் தேதியாக மாற்றப்பட்டது.
இதனிடையே, மத்திய அரசு கடந்த ஆண்டு வெளியிட்ட மற்றோர் அறிவிப்பில், இந்த சட்ட வரம்புக்குள் ரூ.10 லட்சத்துக்கும் அதிகமாக நன்கொடை மற்றும் அரசிடம் இருந்து ரூ.1 கோடிக்கும் அதிகமாக சலுகைகள் பெறும் தன்னார்வ அமைப்புகளும் கொண்டு வரப்படுவதாக அறிவிக்கப்பட்டது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

வேட்டையன் படப்பிடிப்பில் அமிதாப் பச்சன்-ரஜினிகாந்த்!

‘நீங்க நடிக்க ஆரம்பிக்கலாமே, ஜோனிடா!’

போஷியா! மாற்றுத் திறனாளிகளின் விளையாட்டு பற்றி உங்களுக்குத் தெரியுமா?

திருப்பதியில் ஹெபா படேல்!

பாஜக ஆட்சியில் கவலைக்கிடமான பத்திரிகை சுதந்திரம்: முதல்வர் ஸ்டாலின்

SCROLL FOR NEXT