முகப்பு
இந்தியா

இந்தியைத் தொடர்ந்து ஆங்கிலத்தையும் எதிர்க்கும் கர்நாடகா

பெங்களூரு: இந்தி மொழி எதிர்ப்பைத் தொடர்ந்து தற்போது ஆங்கிலத்தையும் கன்னட அமைப்புகள் எதிர்த்து வருகின்றன.

Updated On : 6 ஜூலை, 2017 at 4:46 PM
பகிர்:

கர்நாடகத்தின் பல்வேறு பகுதிகளில் இந்தி மொழி எதிர்ப்புப் போராட்டம் வலுத்து வருகிறது. இந்நிலையில், பல்வேறு கன்னட அமைப்புகள் தற்போது ஆங்கில மொழிக்கும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன.

இதுதொடர்பாக ட்விட்டரில் 'நமது மெட்ரோவில் இந்தி எதற்கு' என்ற வாசகத்துடன் பிரசாரம் மேற்கொண்டு வருகின்றனர். அதில், ஆங்கில மொழிக்கும் எதிர்ப்பு வலுத்து வருகிறது.

பெங்களூரு மெட்ரோ ரயில் நிலையங்களில் கன்னடம், இந்தி, ஆங்கிலம் உள்ளிட்ட மொழிகளில் பெயர் பலகைகள் இடம்பெற்றிருந்தன. இதில் இடம்பெற்ற இந்தி மற்றும் ஆங்கில மொழிகளை கன்னட அமைப்புகள் அழித்து வருகின்றன. அதுபோல வேறு சில இடங்களிலும் இதுபோன்று எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.

Advertisement

இதுகுறித்து கர்நாடக ரக்ஷன வேதிகா என்ற கன்னட அமைப்பைச் சேர்ந்த பிரவீன் ஷெட்டி கூறியதாவது:

இங்கிருந்து நிலம், மின்சாரம் ஆகியவற்றை பயன்படுத்துகிறார்கள். ஆனால், கன்னட மொழியை மட்டும் பயன்படுத்தமாட்டார்கள். கன்னட இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பையும் வழங்க மறுக்கின்றனர்.

முதலில் தில்லி உள்ளிட்ட மாநிலங்களில் கன்னட மொழியில் பெயர் பலகைகளை வைத்திடுங்கள். பிறகு நாங்கள் உங்கள் மொழியை இங்கு பயன்படுத்துகிறோம் என்றார். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.