இந்தியா

'மிஸ்டர் ஹெலிகாப்டர்' தோனிக்கு குவிந்த பிறந்தநாள் வாழ்த்துக்கள்

Raghavendran

இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டனும் 'கேப்டன் கூல்' என்றழைக்கப்பட்ட மகேந்திர சிங் தோனி, தனது 36-வது பிறந்தநாளை இன்று கொண்டாடினார்.

இதையடுத்து அவருக்கு பல்வேறு தரப்பில் இருந்தும் வாழ்த்துக்கள் குவிந்தன. குறிப்பாக அவருடன் இணைந்து விளையாடிய கிரிக்கெட் வீரர்கள் ட்விட்டர் மூலம் தங்கள் வாழ்த்துக்களை பதிவு செய்தனர்.

இந்திய அணியில் விக்கெட் கீப்பர் மற்றும் அதிரடி ஆட்டக்காரராக களமிறங்கியவர் மகேந்திர சிங் தோனி. பின்னர், இந்திய அணியின் கேப்டனாக செயல்பட்டு பல வெற்றிகளையும், கோப்பைகளையும் பெற்றுத்தந்துள்ளார்.

குறிப்பாக, சர்வதேச கிரிக்கெட்டில் 3 ஐசிசி கோப்பைகளையும் (50 ஓவர் உலகக் கோப்பை, 20 ஓவர் உலகக் கோப்பை, சாம்பியன்ஸ் டிராபி) இந்தியாவுக்கு பெற்றுத்தந்து பெறுமை சேர்த்தவர்.

அதுமட்டுமல்லாமல், 2009-ம் ஆண்டு டெஸ்ட் போட்டிகளுக்கான தரவரிசையிலும் இந்திய அணியை முதலிடத்துக்கு அழைத்துச் சென்றவர்.

இந்நிலையில், கடந்த 2014-ம் ஆண்டு டிசம்பர் மாதம் டெஸ்ட் போட்டிகளில் இருந்து ஓய்வு பெற்றார். பின்னர், நடப்பு ஆண்டில் ஜனவரி 4-ந் தேதியுடன் ஒருநாள் மற்றும் டி20 போட்டிகளுக்கான கேப்டன் பொறுப்பில் இருந்தும் விலகினார்.

இன்று தனது 36-ஆவது பிறந்தநாளை கொண்டாடும் தோனிக்கு சக வீரர்கள் வாழ்த்து தெரிவித்த ட்வீட்கள் இதோ:

பிறந்தநாள் வாழ்த்துக்கள் 'மிஸ்டர். ஹெலிகாப்டர்'. இந்தநாள் இனிய நாளாக அமைய எனது மனமார்ந்த வாழ்த்துக்கள். உனக்கான 'கேக்' தயாராக உள்ளது என யுவராஜ் சிங் ட்வீட் செய்தார்.

இந்திய மக்களுக்கு அதிக மகிழ்ச்சியான தருணங்களை அளித்த தோனிக்கு பிறந்தநாள் வாழ்த்துக்கள். ஹெலிகாப்டர் என்றும் உயரப் பறந்து எங்கள் நெஞ்சில் நீங்காமல் இடம்பெற வேண்டும் என சேவாக் தனது ட்விட்டரில் வாழ்த்தினார்.

கிரிக்கெட்டின் லெஜண்டுக்கு பிறந்தநாள் வாழ்த்துக்கள். நீங்கள் செய்த அத்தனை சாதனைகளுக்கும் நன்றி. மேலும் தங்கள் பணி சிறக்க வாழ்த்துக்கள் என முகமது கைஃப் தெரிவித்துள்ளார்.

பிறந்தநாள் வாழ்த்துக்கள் தோனி. இந்த நாளும், வருடமும் இனியதாக அமையட்டும் என லஷ்மண் தனது வாழ்த்துச் செய்தியை பதிவிட்டார்.

அதுபோல, சர்வதேச கிரிக்கெட் கௌன்சில் (ஐசிசி) மற்றும் இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் (பிசிசிஐ) ஆகியவையும் தோனியின் தருணங்கள் அடங்கிய வீடியோ பதிவுகளுடன் தங்கள் வாழ்த்தினை தெரிவித்துள்ளன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

சிபிசிஎல் விரிவாக்கப் பணிகளுக்கு எதிா்ப்பு: கிராம மக்கள் உண்ணாவிரதப் போராட்டம்

திருச்சி - தஞ்சை ரயிலை நாகை வரை நீட்டிக்க வலியுறுத்தல்

சாலையில் கண்டெடுத்த நகை உரியவரிடம் ஒப்படைப்பு

நீா்மோா் பந்தல் திறப்பு

தொழிலாளா் தினம்: கொடியேற்று நிகழ்ச்சிகள்

SCROLL FOR NEXT