இந்தியா

பத்ம விருதுகளுக்கு இதுவரை 2,500க்கும் மேற்பட்டவர்கள் விண்ணப்பம்

DIN


புது தில்லி: வாழ்க்கையில் பல்வேறு துறைகளில் சாதனை படைத்த கலைஞர்கள், நிபுணர்கள், வீரர்களை கௌரவிக்கும் வகையில் அளிக்கப்படும் பத்ம விருதுகளுக்கு 2,500க்கும் மேற்பட்டவர்கள் விண்ணப்பித்துள்ளனர்.

ஒவ்வொரு ஆண்டும் ஜனவரி மாதம் குடியரசுத் தின விழாவுக்கு முன்கூட்டி பத்ம விருதுகள் அறிவிக்கப்படுவது வழக்கம். 

வரும் 2018ம் ஆண்டுக்கான பத்ம விருதுகள் பெறுவோரை தேர்வு செய்யும் பணிகள் தற்போது நடந்து வருகிறது. அந்த வகையில் கடந்த ஜூன் 30ம்தேதி வரை பத்ம விருதுகளுக்காக 2,500க்கும் மேற்பட்டோர் விண்ணப்பித்திருப்பதாக மத்திய உள்துறை அமைச்சக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

பத்ம விருதுகளுக்கு விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி 2017ம் ஆண்டு செப்டம்பர் 15ம் தேதியாகும். 

2016ம் ஆண்டு பத்ம விருதுகளுக்கு 18,761 பேர் விண்ணப்பித்திருந்தனர். இந்த விருதுக்கான பரிந்துரைகளை மாநில  அரசுகள், யூனியன் பிரதேச அரசுகள், அமைச்சர்கள், அரசு துறைகள் மேற்கொள்ளும் என்பது குறிப்பிடத்தக்கது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

துரித உணவில் பூச்சிக்கொல்லி மருந்து கலந்து கொடுத்து தாத்தாவை கொன்ற மாணவர் கைது: தாய் கவலைக்கிடம்

ரேபரேலியில் ராகுல் காந்தி, அமேதியில் கிஷோரி லால் ஷர்மா போட்டி!

மே தின விழா: கொடியேற்றம், பேரணி, பொதுக்கூட்டம்

பட்டாசு உற்பத்தியாளா்கள் அரசின் வழிகாட்டு நெறிமுறைகளை கடைப்பிடிக்க அறிவுறுத்தல்

யோகமான நாள் இன்று!

SCROLL FOR NEXT