நாடாளுமன்ற உணவில் 'சிலந்தி': கண்காணிப்பு அதிகாரி 'வாந்தி'
நாடாளுமன்ற உணவகத்தில் வழங்கப்பட்ட உணவில் சிலந்தி இருந்ததால் கண்காணிப்பு அதிகாரி உடல்நலமின்றி காணப்பட்டார்.
நாடாளுமன்ற உணவகத்தில் செவ்வாய்கிழமை மதியம் வழக்கம்போல் அங்கு பணிபுரியும் ஊழியர்கள் உணவருந்த வந்தனர்.
அப்போது நாடாளுமன்ற உணவகத்திலேயே கண்காணிப்பு அதிகாரி ஸ்ரீனிவாசன் வாந்தி எடுத்ததுள்ளார். இதனால் சக ஊழியர்கள் கூடி அவரின் உடல்நிலை குறித்து பரிசோதித்தனர்.
இந்நிலையில், மதிய உணவாக பொங்கலும், தயிர் சாதமும் ஸ்ரீனிவாசன் வாங்கியுள்ளார். அதில் சிலந்தி இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இதனால் அங்கு கூடிய சக ஊழியர்களுக்கு அதிர்ச்சி ஏற்பட்டது.
Advertisement
இதுகுறித்து ஸ்ரீனிவாசன் கூறியதாவது:
வழக்கம்போல் நாடாளுமன்ற உணவகத்தில் மதிய உணவாக பொங்கலும், தயிர் சாதமும் வாங்கினேன். சிறிய அளவில் அந்த உணவை உண்ட உடனேயே வாந்தி எடுத்துவிட்டேன்.
அப்போதுதான் நான் வாங்கிய உணவில் சிலந்தி இருந்தது தெரிந்தது. இதுகுறித்து உணவக அதிகாரிகளிடம் புகார் அளித்தேன் என்றார்.
இதனால் ஸ்ரீனிவாசனுக்கு தற்போது உடல்நலக் குறைவு ஏற்பட்டுள்ளது.