இந்தியா

கொல்கத்தாவிலிருந்து அந்தமான் நோக்கிச் சென்ற சரக்கு கப்பல் நீரில் மூழ்கி விபத்து!

DIN

கொல்கத்தா: கொல்கத்தாவிலிருந்து அந்தமான் நோக்கிச் சென்ற ஐ.டி.சி பாந்தர் என்னும் சரக்கு கப்பல் அந்தமான் அருகே நீரில் மூழ்கியது

கொல்கத்தா துறைமுகத்திலிருந்து அந்தமான் தீவுகள் நோக்கிச் சென்ற 'ஐ.டி.சி பாந்தர்' என்னும் சரக்கு கப்பல் இன்று காலை அந்தமான் அருகே 125 நாட்டிக்கல் மைல் தொலைவில் நீரில் மூழ்கியது

கப்பலிலிருந்து 11 ஊழியர்களும் உயிர் காக்கும் கவசங்களை அணிந்து கொண்டு கடலில் குதித்து தப்பியதாக அங்கிருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

நீரில் மூழ்கிய கப்பலில் 29 கண்டெய்னர்கள் இருந்ததாக தெரிய வருகிறது. மீட்பு பணிகளுக்காக கடலோர காவல் படையானது விரைந்துள்ளது.

மோசமான வானிலை காரணமாக இந்த விபத்து நடந்திருக்கலாமென்று தெரிய வருகிறது. மீட்பு பணிகள் தொடர்ந்து நடந்து வருகிறது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ரயில்வே பாதுகாப்புப் படையில் 4660 காலியிடங்கள்: 14-க்குள் விண்ணப்பங்கள் வரவேற்பு!

இந்தியாவின் முதல் மல்யுத்த வீராங்கனை: சிறப்பித்த கூகுள்!

நெல்லை மாவட்ட காங். தலைவர் சடலமாக மீட்பு!

பிரேசிலில் கனமழைக்கு 70 பேர் மாயம்: 39 பேர் பலி!

கமர்ஷியல் கம்பேக் கொடுத்தாரா சுந்தர் சி?: அரண்மனை - 4 திரைவிமர்சனம்

SCROLL FOR NEXT