இந்தியா

பூரண மது விலக்கை அமல்படுத்துங்கள்: உ.பி. முதல்வருக்கு நிதீஷ் வலியுறுத்தல்

DIN

உத்தரப் பிரதேசத்தில் பூரண மது விலக்கையும், உள்ளாட்சி அமைப்புகளில் பெண்களுக்கு 50 சதவீத இடஒதுக்கீட்டையும் அமல்படுத்த வேண்டும் என்று அந்த முதல்வர் யோகி ஆதித்யநாத்தை பிகார் முதல்வர் நிதீஷ் குமார் வலியுறுத்தினார்.
பிகார் மாநிலம், தர்பங்கா மாவட்டத்தில் ரூ.300 கோடி மதிப்பிலான வளர்ச்சித் திட்டங்களுக்கு புதன்கிழமை அடிக்கல் காட்டிய பிறகு, அங்கு நடைபெற்ற பொதுக் கூட்டத்தில் நிதீஷ் குமார் பேசியதாவது:
பல்வேறு வளர்ச்சித் திட்டங்களைத் தொடக்கி வைப்பதற்காக, நான் தர்பங்கா நகருக்கு வந்திருக்கிறேன். இந்த நிலையில், உத்தரப் பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத் வியாழக்கிழமை இங்கு வருகை தர இருக்கிறார். அவர் வெறுங்கையோடு வரக் கூடும். அதற்கு முன்பு, பிகார் மாநிலத்தைப் பின்பற்றி, உத்தரப் பிரதேசத்தில் பூரண மது விலக்கையும், உள்ளாட்சி அமைப்புகளில் பெண்களுக்கு 50 சதவீத இடஒதுக்கீட்டையும் அவர் அமல்படுத்திட வேண்டும்.
தேர்தலின்போது மக்களுக்கு அளித்த வாக்குறுதிகளை நாங்கள் நிறைவேற்றி விட்டோம். ஆனால், மற்றவர்கள் மறந்துவிட்டனர். 2014-ஆம் ஆண்டு நடைபெற்ற மக்களவைத் தேர்தலின்போதும், அதற்கு அடுத்த ஆண்டு நடைபெற்ற பிகார் சட்டப் பேரவைத் தேர்தலின்போதும் மக்களுக்கு அளித்த வாக்குறுதிகளை அவர்கள் (பிரதமர் மோடி) நிறைவேற்றவில்லை.
இறைச்சிக்காக பசுக்களை விற்பனை செய்வோர் மீது பசுப் பாதுகாவலர்கள், தாங்களாகவே சட்டத்தைக் கையிலெடுத்து நடவடிக்கை எடுப்பதற்கு முன், வீதிகளில் சுற்றித் திரியும் கால்நடைகளைப் பராமரிக்கக் கற்றுக் கொள்ள வேண்டும்.
மாநிலத்தில் பூரண மதுவிலக்கு வெற்றியடைந்த பிறகு, மறுவாழ்வு திட்டம் தொடங்கப்படும் என்று நிதீஷ் குமார் கூறினார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

வேட்டையன் படப்பிடிப்பில் அமிதாப் பச்சன்-ரஜினிகாந்த்!

‘நீங்க நடிக்க ஆரம்பிக்கலாமே, ஜோனிடா!’

போஷியா! மாற்றுத் திறனாளிகளின் விளையாட்டு பற்றி உங்களுக்குத் தெரியுமா?

திருப்பதியில் ஹெபா படேல்!

பாஜக ஆட்சியில் கவலைக்கிடமான பத்திரிகை சுதந்திரம்: முதல்வர் ஸ்டாலின்

SCROLL FOR NEXT