இந்தியா

குடியரசுத் தலைவர் வேட்பாளர்: சோனியாவுடன் ராஜ்நாத் சிங் சந்திப்பு

DIN


புது தில்லி: குடியரசுத் தலைவர் வேட்பாளர் விவகாரம் தொடர்பாக காங்கிரஸ் கட்சித் தலைவர் சோனியாவை, பாஜக தரப்பில் மத்திய அமைச்சர்கள் ராஜ்நாத் சிங், வெங்கையா நாயுடு ஆகியோர் அவரது இல்லத்தில் சந்தித்துப் பேசினர்.

பாஜக சார்பில் குடியரசுத்தலைவர் வேட்பாளர் குறித்து எதிர்க்கட்சிகள் மற்றும் கூட்டணிக் கட்சிகளுடன் ஆலோசனை நடத்த மத்திய அமைச்சர்கள் ராஜ்நாத் சிங் மற்றும் வெங்கையா நாயுடு தலைமையில் குழு அமைக்கப்பட்டது.

இந்த குழுவினர், காங்கிரஸ் தலைவர் சோனியாவை, இன்று காலை அவரது இல்லத்தில் நேரில் சந்தித்துப் பேசினர். அப்போது குடியரசுத் தலைவர் வேட்பாளர் குறித்து ஆலோசனை நடத்தப்பட்டது.

குடியரசுத் தலைவர் தேர்தல் வரும் ஜூலை 17ம் தேதி நடைபெற உள்ளது. இதனால், வேட்பாளரை தேர்வு செய்யும் பணியில் தேசிய கட்சிகள் மிகத் தீவிரமாக செயல்பட்டு வருகின்றன. 

பாஜக சார்பில் இன்னும் குடியரசுத் தலைவர் வேட்பாளர் இறுதி செய்யப்படாத நிலையில், பல்வேறு மாநிலங்களின் கட்சித் தலைவர்களிடமும், எதிர்க்கட்சிகள் மற்றும் கூட்டணிக் கட்சித் தலைவர்களிடமும் ஆதரவு கோரி வருகிறது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மோசமான வானிலை காரணமாக 40 விமானங்கள் ரத்து!

நீட் தேர்வு தொடங்கியது!

சடலமாக மீட்கப்பட்ட மூவர்: விசாரணையில் திடுக்கிடும் தகவல்!

மணல் கடத்தலைத் தடுக்க முயன்ற காவல்துறை அதிகாரி டிராக்டர் ஏற்றிக் கொலை

காங்கிரஸ் நிர்வாகி புகாரளிக்கவில்லை- காவல்துறை மறுப்பு

SCROLL FOR NEXT