இந்தியா

கொல்கத்தா மருத்துவமனையில் நீதிபதி கர்ணனுக்கு 3-ஆவது நாளாக சிகிச்சை

DIN

உச்ச நீதிமன்றத்தை அவமதித்த வழக்கில் கைது செய்யப்பட்ட முன்னாள் நீதிபதி கர்ணனுக்கு கொல்கத்தாவில் உள்ள அரசு மருத்துவமனையில் 3-ஆவது நாளாக சனிக்கிழமையும் சிகிச்சை அளிக்கப்பட்டது.

இதுகுறித்து கொல்கத்தாவில் கர்ணன் அனுமதிக்கப்பட்டிருக்கும் எஸ்எஸ்கேஎம் அரசு மருத்துவமனையைச் சேர்ந்த மருத்துவர் ஒருவர் கூறுகையில், "முன்னாள் நீதிபதி கர்ணனுக்கு 3-ஆவது நாளாக தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டது. அவரது உடல்நிலை தற்போது சீராக உள்ளது. மருத்துவமனையில் இருந்து அவரை அனுப்புவதற்கு முன்பு, மேலும் சில நாள்களுக்கு அவரின் உடல்நிலையை மருத்துவர்கள் கண்காணிக்க வேண்டியுள்ளது' என்றார்.
உச்ச நீதிமன்றத்தை அவமதித்த விவகாரத்தில், கொல்கத்தா உயர் நீதிமன்ற முன்னாள் நீதிபதியான கர்ணனுக்கு எதிராக கடந்த மே மாதம் 9-ஆம் கைது வாரண்ட் பிறப்பிக்கப்பட்டது. இதையடுத்து தலைமறைவான கர்ணனை கோயம்புத்தூர் அருகே கொல்கத்தா போலீஸார் கடந்த செவ்வாய்க்கிழமை கைது செய்தனர். இதைத் தொடர்ந்து, கொல்கத்தாவுக்கு விசாரணைக்காக அவரை போலீஸார் அழைத்துச் சென்றனர். தனக்கு நெஞ்சு வலிப்பதாக கர்ணன் கடந்த வியாழக்கிழமை தெரிவித்தார். எனவே, கொல்கத்தாவில் உள்ள எஸ்எஸ்கேஎம் அரசு மருத்துவமனையில் அவர் அனுமதிக்கப்பட்டார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

நகர்ப்புறங்களிலும் 100 நாள் வேலை உறுதித்திட்டம் -பிரியங்கா காந்தி வாக்குறுதி

ஹெலிகாப்டருக்குள் தவறி விழுந்தார் மம்தா பானர்ஜி!

வெற்றி பெற்றாரா ரத்னம்? - திரைவிமர்சனம்!

மக்களுக்காக அனைத்து துறையினரும் ஒருங்கிணைந்து செயல்பட வேண்டும்: முதல்வர் வலியுறுத்தல்

கடின உழைப்பாளி: சஷாங்க் சிங்கினை பாராட்டிய ஸ்டெயின்!

SCROLL FOR NEXT