இந்தியா

திருப்பதி ஏழுமலையான் கோயிலில் உச்சநீதி மன்றத் தலைமை நீதிபதி வழிபாடு

DIN

ஏழுமலையான் கோயிலில் உச்சநீதி மன்றத் தலைமை நீதிபதி ஜெகதீஷ் சிங் கேஹர் ஞாயிற்றுக்கிழமை வழிபாடு செய்தார்.

உச்சநீதி மன்றத் தலைமை நீதிபதி ஜெகதீஷ் சிங் கேஹர் குடும்பத்துடன் சனிக்கிழமை மாலை திருமலைக்கு வந்தார். அவரை சித்தூர் மாவட்ட ஆட்சியர் பிரத்யும்னா மற்றும் தேவஸ்தான அதிகாரிகள் வரவேற்றனர்.
இரவு திருமலையில் தங்கிய தலைமை நீதிபதி ஞாயிற்றுக்கிழமை அதிகாலை ஏழுமலையானை தரிசிக்க வந்தார்.
கோயில் வாசலில் அவரை தேவஸ்தான செயல் அதிகாரி அனில்குமார் சிங்கால், செயல் இணை அதிகாரி சீனிவாச ராஜு ஆகியோர் கோயில் மரியாதை அளித்து வரவேற்றனர்.
பின்னர் கொடி மரத்தை வணங்கியபடி அவர் சுப்ரபாத சேவையில் ஏழுமலையானைத் தரிசித்து திரும்பினார். அவரை ரங்கநாயகர் மண்டபத்தில் அமர வைத்து வேதபண்டிதர்கள் வேத ஆசீர்வாதம் செய்தனர். பின் அவருக்கு தேவஸ்தான அதிகாரிகள் லட்டுப் பிரசாதம், ஏழுமலையானின் திருவுருவப் படத்தை வழங்கினர்.
பின்னர் அவர், திருச்சானுôர் சென்று பத்மாவதி தாயாரையும் , காளஹஸ்தி சிவனையும் தரிசித்தார்.
மேலும் உச்சநீதிமன்ற நீதிபதி சந்தான கௌடர், ஆந்திர உயர்நீதிமன்ற அட்வகேட் ஜெனரல் தமலபட்டி சீனிவாஸ் மற்றும் நடிகை ஸ்ரீதேவி உள்ளிட்டோரும் குடும்பத்தினருடன் ஏழுமலையானை ஞாயிற்றுக்கிழமை தரிசனம் செய்தனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

டி20 உலகக் கோப்பைக்கு முன்பு ஃபார்முக்குத் திரும்பிய ரோஹித் சர்மா!

கிர்கிஸ்தான்: இந்திய மாணவர்கள் தங்கியிருந்த விடுதியில் வன்முறை

பாஜக 200 இடங்களைக் கூட தாண்டாமல் மண்ணைக் கவ்வும்! -மம்தா

இனி நேர்காணல் அளிக்க மாட்டேன்: சுசித்ரா

வெப்பன் படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பு - புகைப்படங்கள்

SCROLL FOR NEXT