முகப்பு
இந்தியா

ரூ1.35 கோடி பழைய ரூபாய் நோட்டு வைத்திருந்த 3 பேர் கைது

தெலுங்கானா மாநிலத்தில் சுமார் 1.35 கோடி மதிப்பிலான பழைய 500 மற்றும் 1000 ரூபாய் நோட்டுகளை வைத்திருந்ததாக 3 பேர் கைது

Updated On : 29 ஜனவரி, 2024 at 11:16 AM
பகிர்:

ஹைதராபாத்: தெலுங்கானா மாநிலத்தில் சுமார் 1.35 கோடி மதிப்பிலான பழைய 500 மற்றும் 1000 ரூபாய் நோட்டுகளை வைத்திருந்ததாக 3 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர் என போலீஸார் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கடந்தாண்டு நவம்பர் 8-ஆம் தேதி முதல் உயர்மதிப்புடைய 500 மற்றும் 1000 ரூபாய் நோட்டுகள் செல்லாது என மத்திய அரசு அறிவித்தது. மேலும் ஒருமாத கால இடைவெளியில் பழைய ரூபாய் நோட்டுகளை வங்கியில் கொடுத்து மாற்றிக் கொள்ள வேண்டும் என தெரிவித்திருந்தது. அதையடுத்து கடந்த ஜனவரி மாதம் முதல் ரிசர்வ் வங்கிகளில் மட்டுமே பழைய ரூபாய் நோட்டுகளை மாற்ற முடிவும் என அரசு அறிவித்தது.

பிப்ரவரி மாதம் முதல் பழைய 500 மற்றும் 1000 ரூபாய் நோட்டுகள் வைத்திருந்தால் அபராதம் விதிக்கப்படும் என அரசு அறிவித்திருந்தது.

இந்நிலையில், நேற்று மாலை தெலுங்கானா மாநிலம் ஹைதராபாத்தின் ரக்ஷ்புரம் போலீஸாருக்கு 40-60 சதவீதம் கமிஷன் அடிப்படையில் அசோக் குமார், சிறு படங்களின் திரைப்பட தயாரிப்பாளரும் தரகருமான ஒருவர் பழைய ரூபாய் நோட்டுகளை மாற்ற திட்டமிட்டுள்ளதாக போலீஸாருக்கு ரகசிய தகவல்கள் கிடைத்துள்ளது.

இதையடுத்து போலீஸார் குழு உஷார் படுத்தப்பட்டு சோதனையில் ஈடுபட்டு வந்தனர். அப்போது, வி ஸ்ரீதர், நஜீப் அலி கான் மற்றும் ஷேக் நசீர் ஹுசைன் என்ற மூன்று பேர் இரண்டு கார்களில் கொண்டுவரப்பட்ட பழைய ரூ.500 மற்றும் 1000 ரூபாய் நோட்டுகளை போலீஸார் பறிமுதல் செய்துள்ளனர். பறிமுதல் செய்யப்பட்ட பழைய ரூபாய் நோட்டின் மதிப்பு ரூ.1,35,80,000 என போலீஸார் தெரிவித்துள்ளனர்.

காரில் வந்த 3 பேரையும் போலீஸார் கைது செய்து விசாரித்து வருகின்றனர். இதில் 9 பேர் கொண்ட கும்பல் ஈடுபட்டுள்ளதாக தெரிகிறது.
பறிமுதல் செய்யப்பட்டுள்ள பழைய ரூபாய் நோட்டுகள் வருமான வரித்துறையினரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.

பழைய நோட்டுகள் வைத்திருந்தால் அபராதம் விதிக்கப்படும் என அரசு அறிவித்த பின்னர் இவ்வளவு அதிகமான தொகை பிடிபட்டுள்ளது. கைது செய்யப்பட்ட நபர்களிடம் வருவாய் புலனாய்வு அதிகாரிகள் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். 

முழு கட்டுரையைப் படிக்க →