இந்தியா

2017ம் ஆண்டும் பருவ மழை வழக்கத்தை விட குறைவாகவே இருக்கும்: வானிலை ஆய்வு மையம்

தினமணி


புது தில்லி: கடந்த ஆண்டு பருவ மழை பொய்த்துப் போய், தற்போது கடுமையான கோடையை எதிர்கொண்டு வரும் நமக்கு வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள தகவல் அவ்வளவு சிறப்பாக இல்லை.

அதாவது, 2017ம் ஆண்டு பருவ மழை வழக்கத்தை விட சற்றுக் குறைவாகவே இருக்கும் என்று ஸ்கைமெட் வெதர் என்ற தனியார் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

வரும் ஜூன் முதல் செப்டம்பர் மாதம் வரையிலான 4 மாத காலத்தில் சுமார் 887 மி.மீ. மழை பெய்யும் என்பது சராசரி அளவு.  இது 95 அளவுக்கு நம்பகத்தன்மையான கணிப்பு என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும்,

* 2017ம் ஆண்டு பருவ மழை வழக்கத்தை விட மிக அதிகமாக பெய்ய பூஜ்ஜியம் அளவுக்கே வாய்ப்பு உள்ளது.

* வழக்கத்தை விட சற்று அதிகமாக மழை பெய்ய 10 சதவீதம் மட்டுமே வாய்ப்பு உள்ளது.

* வழக்கமான அளவு மழை பெய்ய 50 சதவீத அளவுக்கு வாய்ப்பு உள்ளது.

* வழக்கத்தை விட குறைவாக மழை பெய்ய 25 சதவீதம் அளவுக்கு வாய்ப்பு உள்ளது.

* வறட்சி ஏற்பட 15 சதவீதம் அளவுக்கு வாய்ப்பு உள்ளது என்று வானிலை ஆய்வு தெரிவிக்கிறது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பள்ளி நூலகத்துக்கு புத்தகங்கள்...

புதுக்கோட்டை: மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டியில் மாட்டுச்சாணம் கலக்கப்படவில்லை -ஆய்வில் தகவல்

அணிவகுத்து நின்ற வாகனங்கள்...

வருங்கால வைப்பு நிதி குறை தீா்க்கும் முகாம்

மும்பை விமான நிலையத்தில் 21 கிலோ தங்கம் பறிமுதல்!

SCROLL FOR NEXT