முகப்பு
இந்தியா

அம்மா டிவி தொடங்கும் திட்டத்தில் ஓபிஎஸ் அணி

ஜெயா டிவிக்கு போட்டியாக அம்மா டிவி என்ற பெயரில் புதிய தொலைக்காட்சி சேனலை தொடங்கும் முயற்சியில் ஓபிஎஸ் அணி தீவிரமாக

Updated On : 29 ஜனவரி, 2024 at 11:20 AM
பகிர்:

சென்னை: ஜெயா டிவிக்கு போட்டியாக அம்மா டிவி என்ற பெயரில் புதிய தொலைக்காட்சி சேனலை தொடங்கும் முயற்சியில் ஓபிஎஸ் அணி தீவிரமாக இறங்கியுள்ளதாக தகவல் வெளியாகி வருகின்றன.

சசிகலாவின் குடும்ப சொத்தாக நமது எம்ஜிஆர், ஜெயா டிவி போன்றவை உள்ளதால் அவற்றில் ஓபிஎஸ் அணி உரிமை கோருவதில் சிக்கல் உள்ளதால், அதிமுக (புரட்சித் தலைவி அம்மா) என்ற கட்சியின் பெயரில் இயங்கும் ஓபிஎஸ் அணி தங்களுக்கான ஒரு தொலைக்காட்சி சேனலை தொடங்கும் முயற்சியில் தீவிரமாக இறங்கியுள்ளதாம். அதற்கான அனைத்து கட்டமைப்பு வசதிகளுடன்  ஒளிபரப்புக்கு தயாராக உள்ள ஒரு தொலைக்காட்சி நிறுவனத்திடம் இது தொடர்பான பேச்சுவார்த்தை நடத்தி முடித்துள்ளதாகவும் தகவல் வெளியாகி வருகின்றன.

விரைவில் வெளிவரும் அம்மா டிவி முன்னாள் அமைச்சர் ஒருவரின் நிறுவனத்திலிருந்து செயல்படவுள்ளதாகவும் ஆர்.கே. நகர் இடைத்தேர்தல் முடிவுகளை ஒளிபரப்பும் வகையில் தீவிரமாக ஓபிஎஸ் அணி செயல்பட்டு வருவதாகவும் தகவல் வெளியாகி உள்ளது.

பொருத்திருந்துதான் பார்க்க வேண்டும் அம்மா டிவியின் அம்சத்தை.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.