இந்தியா

தமிழக விவசாயிகள் வாயில் பாம்புக்கறியுடன் தில்லியில் நூதன போராட்டம்: நாளை ராகுல் சந்திப்பு  

தினமணி

புதுதில்லி: தில்லி ஜந்தர்-மந்தரில் 16 நாள்களாகப் போராட்டம் நடத்தி வரும் தமிழகத்தைச் சேர்ந்த விவசாயிகள் சங்கப் பிரதிநிதிகள் இன்று கொடூரம் பாம்புக் கறி தின்று நூதன போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

தமிழகத்தில் நிலவும் கடும் வறட்சியின் காரணமாக கடந்த சில மாதங்களில் மட்டும் 250க்கும் மேற்பட்ட விவசாயிகள் தற்கொலை செய்து கொண்டும், மாரடைப்பு ஏற்பட்டும் உயிரிழந்துள்ளனர். எனவே, உடனடியாக காவிரி மேலாண்மை வாரியம் அமைத்தல், விவசாயிகள் கடன் தள்ளுபடி, நதிகள் இணைப்பு, பயிர் காப்பீட்டுக் கடன் தள்ளுபடி, உடனடியாக நிவாரண உதவி உள்ளிட்ட கோரிக்கைகளை நிறைவேற்ற வலியுறுத்தி 16வது நாளாக பெண்கள் உள்பட 100க்கும் மேற்பட்ட தமிழக விவசாயிகள் தில்லி ஜந்தர் மந்தர் பகுதியில் போராட்டம் நடத்தி வருகின்றனர்.

ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு வகையில் போராட்டம் நடத்தி வரும் தமிழக விவசாயிகள், இன்று பாம்புக் கறி தின்று விவசாயிகள் போராட்டத்தில் நடத்தி வருகின்றனர். பச்சையாக பாம்பின் கறியை எடுத்து வாயில் கடித்தவாறு விவசாயிகள் அனைவரும் போராட்டக்களத்தில் அமர்ந்துள்ளனர்.

இந்நிலையில், தில்லியில் போராட்டம் நடத்தி வரும் தமிழக விவசாயிகளை காங்கிரஸ் கட்சி துணைத்தலைவர் ராகுல் காந்தி சந்திக்கவுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

வறட்சி பாதித்த 22 மாவட்டங்களுக்கு குடிநீா் விநியோகிக்க ரூ.150 கோடி: முதல்வா் மு.க.ஸ்டாலின் உத்தரவு

ஹெச்சிஎல் நிகர லாபம் ரூ.3,986 கோடியாக உயா்வு

சா்.பி.டி.தியாகராயா் சிலைக்கு மரியாதை

தமிழகத்தில் கோடை மழை 83 சதவீதம் குறைவு

இணையதள பண மோசடிகளில் சிக்காமல் கவனமாக இருக்க வேண்டும்: மாணவா்களுக்கு கூடுதல் எஸ்.பி. அறிவுரை

SCROLL FOR NEXT