இந்தியா

திருப்பதியில் ரூ.140 கோடியில் புற்றுநோய் மருத்துவமனை

DIN

திருப்பதி: திருப்பதியில் ரூ.140 கோடி மதிப்பீட்டில் புதிய புற்றுநோய் மருத்துவமனை ஏற்படுத்தப்பட உள்ளதாக தேவஸ்தான செயல் அதிகாரி சாம்பசிவ ராவ் தெரிவித்தார்.

இதுகுறித்து அவர் மேலும் கூறியதாவது:
ஆந்திர அரசு திருப்பதியை உலகத் தரம் வாய்ந்த மருத்துவ மையமாக மாற்ற பல மருத்துவமனைகளை ஏற்படுத்தி வருகிறது. அதன்படி, அரவிந்த் கண் மருத்துவமனைக்கான கட்டுமானப் பணிகள் இன்னும் 15 நாள்களில் தொடங்கப்பட உள்ளது.

இதேபோல் டாடா குழுமம் திருப்பதியில் புற்றுநோய் மருத்துவமனையை ஏற்படுத்த உள்ளது. இதற்காக திருப்பதி எஸ்.வி. வேதிக் பல்கலைக்கழகம் அருகே தேவஸ்தானம் 25 ஏக்கர் நிலத்தை குத்தகை அடிப்படையில் டாடா நிறுவனத்துக்கு ஒதுக்கி உள்ளது.

இங்கு ரூ.140 கோடி செலவில் உலகத்தரம் வாய்ந்த புற்றுநோய் மருத்துவமனை ஏற்படுத்தப்பட உள்ளது. இதில், ரூ.100 கோடி டாடா நிறுவனமும், ரூ.40 கோடியை நன்கொடை மூலம் வசூல் செய்ய உள்ளதாகவும் சாம்பசிவ ராவ் தெரிவித்தார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ஹிந்துக்களை இரண்டாம் தர குடிமக்களாக மாற்றிய திரிணமூல்: பிரதமா் மோடி குற்றச்சாட்டு

அமேதியில் தோ்தலுக்கு முன்பே தோல்வியை ஒப்புக் கொண்டது காங்கிரஸ்: ஸ்மிருதி இரானி கருத்து

தினம் தினம் திருநாள்: தினப்பலன்கள்!

விவசாயிகளுக்கு வேளாண்மைக் கல்லூரி மாணவிகள் செய்முறை விளக்கம்

இன்றைய ராசி பலன்கள்!

SCROLL FOR NEXT