இந்தியா

முத்தலாக் முறையை ஏற்க முடியாது என்று கூற பெண்களுக்கு வாய்ப்பு உண்டா? உச்ச நீதிமன்றம் கேள்வி

PTI


புது தில்லி: முஸ்லிம் திருமணத்தின் போதே, தாங்கள் முத்தலாக் முறையை ஏற்க மாட்டோம் என்று கூற பெண்களுக்கு வாய்ப்பு வழங்கப்படுமா என்று முஸ்லிம் தனி நபர் சட்ட வாரியத்திடம் உச்ச நீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது.

முத்தலாக் முறைக்கு எதிராக தொடரப்பட்ட மனுக்கள் மீதான விசாரணை 5 நீதிபதிகள் கொண்ட அரசியல் சாசன அமர்வு முன்பு இன்று காலை விசாரணைக்கு வந்தது.

அப்போது, திருமணத்தின் போதே, நான் முத்தலாக் முறையை ஏற்க மாட்டேன் என்று மணப்பெண் கூறுவதற்கு வாய்ப்பளிக்கப்படுமா என்று அனைத்திந்திய முஸ்லிம் தனி நபர் வாரியத்திடம் நீதிபதிகள் கேள்வி எழுப்பினர்.

முஸ்லிம் தனி நபர் வாரியம் சார்பில் ஆஜராகி வாதாடி வரும் மூத்த வழக்குரைஞர் கபில் சிபல், "இதுபோன்ற யூகங்களுக்கு எங்கள் தரப்பில் எந்த விளக்கமும் இல்லை" என்று பதிலளித்தார்.

நேற்றைய விசாரணையின் போது,

தலாக் விவாகரத்து முறையை முஸ்லிம் சமூகத்தினர் கடந்த 1,400 ஆண்டுகளாக பின்பற்றி வருகின்றனர் என்று உச்ச நீதிமன்றத்தில் அகில இந்திய முஸ்லிம் தனிச் சட்ட வாரியம் (ஏஐஎம்பிஎல்பி) செவ்வாய்க்கிழமை தெரிவித்தது.
ராமர் பிறந்த இடம் அயோத்தி என்ற நம்பிக்கையை எப்படி அரசியல் சாசன வரம்புக்குள் கொண்டுவர இயலாதோ, அதுபோலவே தலாக் விவாகரத்து நம்பிக்கைகளையும் கொண்டு வரக் கூடாது என்றும் வாதிடப்பட்டது.
மூன்று முறை தலாக் கூறி பெண்களை விவகாரத்து செய்யும் முறையை இஸ்லாமியர்கள் பின்பற்றி வருவதற்கு கட்டுப்பாடு விதிக்க மத்திய அரசு திட்டமிட்டது. இதை எதிர்த்து பல்வேறு முஸ்லிம் அமைப்புகள் சார்பில் உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது. அந்த மனுக்கள் மீதான விசாரணை உச்ச நீதிமன்றத் தலைமை நீதிபதி ஜே.எஸ்.கேஹர், நீதிபதிகள் குரியன் ஜோசப், ஆர்.எஃப்.நாரிமன், யு.யு.லலித், அப்துல் நசீர் ஆகியோர் அடங்கிய அரசியல் சாசன அமர்வு முன்பு நடைபெற்று வருகிறது.

முஸ்லிம் திருமண விதிகள் மற்றும் விவாகரத்து முறைகள் ஒழிக்கப்பட்டால் அதற்கு மாற்றாக புதிய சட்டம் வகுக்கப்படும் என்று ஏற்கெனவே மத்திய அரசு உச்ச நீதிமன்றத்தில் தெரிவித்திருந்தது. இந்நிலையில், செவ்வாய்க்கிழமை நடைபெற்ற விசாரணையின்போது அகில இந்திய முஸ்லிம் தனிச் சட்ட வாரியம் சார்பில் ஆஜரான மூத்த வழக்குரைஞர் கபில் சிபல் வாதாடியதாவது:

கி.பி. 637-ஆம் ஆண்டில் இருந்தே தலாக் விவாகரத்து நடைமுறை முஸ்லிம் சமூகத்தில் இருந்து வருகிறது. முகமது நபியின் பொன் மொழிகளிலேயே இதுதொடர்பான கருத்துகளும் இடம்பெற்றுள்ளன.

இந்த நடைமுறை கிட்டத்தட்ட 1,400 ஆண்டுகளாக கடைப்பிடிக்கப்பட்டு வருகிறது. எனவே, தலாக் விவாகரத்து முறையை இஸ்லாமியத்துக்கு எதிரானது என எவரும் கூற இயலாது.

ராமர் அவதரித்த இடம் அயோத்தி என நம்பப்படுகிறது. அந்த விஷயத்தை எப்படி அரசியல் சாசன விதிகளின் வரம்புக்குள் கொண்டுவர முடியாதோ, அதுபோலவே தலாக் விவகாரத்தையும் கொணடு வர இயலாது என்றார் அவர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

உதகையில் இ-பாஸ் நடைமுறை: பொதுமக்கள் வரவேற்பு

காரைக்கால் மாங்கனித் திருவிழா ஜூன் 19-இல் தொடக்கம்

கொடநாடு கொலை, கொள்ளை வழக்கு விசாரணை: ஜூன் 21-க்கு ஒத்திவைப்பு

குடிநீா்த் தேவையை கருதியே பவானிசாகா் அணையில் இருந்து பாசனத்துக்கு தண்ணீா் திறக்கவில்லை: அமைச்சா் சு.முத்துசாமி

நாளை குருப்பெயா்ச்சி: ஆலங்குடியில் சிறப்பு ஏற்பாடுகள்

SCROLL FOR NEXT