பிரபல ஹிந்தி நடிகை ரீமா லாகு மாரடைப்பால் மரணம்
பிரபல இந்தி நடிகை ரீமா லாகு மாரடைப்பால் காலமானார். அவருக்கு வயது 59.
இந்தியாபிரபல ஹிந்தி நடிகை ரீமா லாகு மாரடைப்பால் மரணம்
பிரபல இந்தி நடிகை ரீமா லாகு மாரடைப்பால் காலமானார். அவருக்கு வயது 59.
மும்பை: பிரபல இந்தி நடிகை ரீமா லாகு மாரடைப்பால் காலமானார். அவருக்கு வயது 59.
நேற்று நள்ளிரவு 1 மணியளவில் திடீரென இவருக்கு நெஞ்சுவலி ஏற்பட்டதை அடுத்து, அவர் உடனடியாக மும்பையில் உள்ள கோகிலாபென் திருபாய் அம்பானி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். தீவிர சிகிச்சை அளித்தும் பயனில்லாமல், 3.15 மணியளவில் ரீமா லாகு மரணம் அடைந்தார்.
இது குறித்து லாகுவின் மருமகன் வினய் வைகுல் கூறுகையில், அவருக்கு எந்த உடல் நலக் குறைவும் இல்லை. நன்றாகவே இருந்தார். திடீரென மாரடைப்பு ஏற்பட்டது. இது எங்களுக்கு பேரிடியாக உள்ளது என்று தெரிவித்தார்.
ஏராளமான தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில் நடித்துள்ள லாகு, ஹிந்தி மற்றும் மராத்தி மொழிப் படங்களிலும் நடித்துள்ளார்.